Menu
Your Cart

கச்சத்தீவு

கச்சத்தீவு
கச்சத்தீவு
₹199
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கச்சத்தீவு

ரா காந்தி- சிறிமாவோ பண்டாரநாயக ஒப்பந்தம் மூலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமல்ல; தமிழக மீனவர்களின் உரிமைகளும் எதிர்காலமும் சேர்த்தே பறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைவசம் சென்றதை இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும் பார்க்கமுடியும். மத்திய அரசு நினைத்தால் மாநில அரசின் மீது எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதற்கான சமகால சாட்சியம் இது. அறுநூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் ஊனமாக்கப்பட்டுள்ளார்கள். மதிப்பிட முடியாத அளவுக்குப் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் பெரும் வல்லரசுக் கனவுடன் இருக்கும் இந்தியாவால் சின்னஞ்சிறு இலங்கைத் தீவை குறைந்தபட்சம் அதட்டக்கூடிய முடியவில்லை. இதை மத்திய அல்லது மாநில அரசின் இயலாமை அல்லது விருப்பமின்மை என்று மட்டுமே புரிந்துகொள்வது பிரச்னையின் ஆழ, அகலங்களைக் குறைத்து மதிப்பிடுவதாகிவிடும். மாறாக, இந்தியா மற்றும் இலங்கையின் பூகோள, அரசியல் நலன்களை விரிவாக ஆராய்ந்தால் மட்டுமே கச்சத்தீவு பிரச்னையின் முழுப் பரிமாணமும் காணக்கிடைக்கும். கச்சத்தீவு கைமாறிய வரலாறு, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத்தமிழர் போராட்டத்தின் தாக்கம், இருதரப்பு நியாயங்கள், மீனவர்களின் எதிர்பார்ப்புகள், கச்சத்தீவை மீட்பதில் உள்ள சட்டச் சிக்கல்கள், நிபுணர்கள் முன்வைக்கும் தீர்வுகள் என்று கச்சத்தீவு குறித்த முழுமையான அரசியல், சமூக, வரலாற்றுச் சித்திரத்தை முன்வைக்கிறது இந்தப் பதிவு. நூலாசிரியர் ஆர். முத்துக்குமார். இந்திய மற்றும் தமிழக அரசியல் குறித்து விரிவான வாசிப்பையும் ஆய்வையும் மேற்கொண்டு வருபவர். திராவிட இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்), தமிழக அரசியல் வரலாறு (இரண்டு பாகங்கள்) என்ற இவருடைய இரண்டு பெருநூல்களும் பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றவை.

Book Details
Book Title கச்சத்தீவு (Kachatheevu)
Author ஆர்.முத்துக்குமார் (R.Muthukumar)
ISBN 9789382577621
Publisher சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixthsense Publications)
Pages 168
Year 2013
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, TamilNadu Politics | தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனையோ வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். பல வீர, தீர பராக்கிரமங்கள் புரிந்திருக்கிறார்கள். ஆனால், உலகின் மிகச் சிறந்த ராணுவ கமாண்டர்..
₹143 ₹150
யூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார் அவர். ஆக்னஸ், அன்னை தெரசாவாக மாறியது அப்போதுதான். போரா? பேரழிவா? தொழுந..
₹181 ₹190
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு. இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமரா..
₹304 ₹320
அம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம் கொண்டிருந்தார். அம்பேத்கர் முதலில் உடைத்தது இந்த மாயையைத்தான். அவரது அரசியல் போராட்டம் இங்கிருந்து தொடங்குகிறது. சாதி இந்துக்களின..
₹214 ₹225