Menu
Your Cart

அருகன்மேடு

அருகன்மேடு
அருகன்மேடு
-5 % Out Of Stock
அருகன்மேடு
அருகன்மேடு
அருகன்மேடு
ரமேஷ் பிரேதன் (ஆசிரியர்)
₹152
₹160
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
செங்கேணி ஒருவாரம் தங்கினாள். பழகப்பழக அவளுடம்பின் ஆண் தடயங்கள் அறவே மறைந்துப்போயின. மனிதவுடம்பு தசை, நரம்பு, எலும்பு, குருதி இவற்றால் மட்டுமன்று, அது மொழி என்னும் சமூகக் கூட்டு அறிவாலுமானது. செங்கேணியின் மார்பில் கைப்பிடிக்குள் அடங்கும் ஆண் காம்பு அரும்பிய முலைகள் புடைத்திருந்தன; அவை மொழியாலானவை. ஆம், மொழியின் இயங்கியல் ஓர் உடம்பின் பால் தன்மையை மாற்றியமைக்க வல்லது. இது, கல்லை நட்டு தெய்வம் என்று வணங்கும் மனவேதிமையின் பாற்பட்டது. கல்லை உயிர்ப்பிக்கும் மொழி, உடம்பில் கெட்டிப்பட்டுப்போன பாலடையாளத்தை மாற்றியமைக்காதா? விலங்கு, மனிதர், கடவுள் இவை மூன்றிற்குமிடையே நிகழும் ரசவாதம் மொழியின் விளைவு. அவளொரு ரசவாதி. அவளால் இந்த உப்புக் கடலைப் பாற்கடலாக மாற்றமுடியும். அவளுடம்பு பகலில் ஒன்றாகவும் இரவில் வேறொன்றாகவும் உருமாற்றமடைந்தது. கோயில்கொண்ட செங்கழுநீர் அம்மனின் வாடை அவளுடம்பில் கமழ்ந்தது. தன் விருப்பமில்லாமல் அவளுடம்பை யாராலும் தொடமுடியாது என்றாள். மழைக்குள் நடந்தாலும் தன்னுடைய இசைவின்றி மழையால் தன்னை நனைக்க முடியாது எனச் சொன்னபோது என்னால் நம்பாமலிருக்க முடியவில்லை. ஆம், அவளொரு மாயயெதார்த்தப் பனுவல்.
Book Details
Book Title அருகன்மேடு (aruganmedu)
Author ரமேஷ் பிரேதன் (Ramesh Prethan)
ISBN 9789392876394
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ரமேஷ் பிரேதன் அவன் பெயர் சொல் என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். இல்லை, நாவலை சாக்காகக் கொண்டு தன் மனச்சுமைகளை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார். எழுதி முடித்தபிறகு எழுத்தாளன் கொள்கின்ற ஆசுவாசம்தான் முக்கியமானது. அதற்கு ஈடுசொல்ல இவ்வுலகில் எதுவுமில்லை. அது விலைமதிப்பற்றது. அபூர்வமானது. எழுத்தை தவமாகச்..
₹190 ₹200
மேலும் சொல்கிறேன் கேள், உலகிலுள்ள தமிழர்கள் அனைவரும் ழகரத்தைச் சரியாக உச்சரிக்கும் காலத்தில் அவர்களுக்கென்று தனி நாடு பூமியில் தானே மலரும். அது அடுத்த ஆண்டில் மலரலாம், அடுத்த நூற்றாண்டிற்கும் தள்ளிப்போகலாம். தமிழர்கள் செய்யவேண்டியது, நாக்கை மடித்து ழகரத்தை உச்சரிக்க முயல்வதே. உனக்கு ஒரு மொழியியல் ரக..
₹133 ₹140
உறக்கமற்ற வெண்ணிற இரவுகளில் அம்பிகா பாம்புடன் ஓயாத விவாதத்தில் ஈடுபட்டாள் அவள் யாரை நினைத்து அழைக்கிறாளோ அவராக உருமாறி அவள்முன் வந்து அமர்ந்து பாம்பு விடியும்வரைபேசிக்கொண்டிருக்கும் பாம்பின் அழகு வேறூ எதற்கும் புவிமிசை வாய்க்கவில்லை படமெடுத்துக் கொத்தும்போது நஞ்சு உடம்பில் ஊறி சாவின் விளிம்பில் நிறு..
₹143 ₹150