Menu
Your Cart

சாதி - தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் அறிமுகம்

சாதி - தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் அறிமுகம்
-5 %
சாதி - தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் அறிமுகம்
₹90
₹95
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது இந்த நூல். சாதியைக் கடத்தல் என்பதன் முதல் படி அதைப் புரிந்துகொள்வதுதான். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும். பெருமாள்முருகன் இந்தியச் சாதி முறை தனித்துவமான ஒரு சமூக வடிவம். அதன் தோற்றம், நிலைபேறு, மாற்றம் ஆகியவை பற்றி அனைத்திந்தியத் தளத்தில் வைத்துப் பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் சுரிந்தர் ஜோத்கா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர். சாதியின் புறநிலை இயங்கியல் காலகதியில் மாறிவந்தாலும், அதன் அடிநிலைக் கருத்தியல் தளம் அந்த அளவிற்கு மாறவில்லை. இதனைப் பண்டைக் காலம், காலனியக் காலம், பின்காலனியக் காலம் ஆகியவற்றினூடாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர். சாதி பற்றிய செவ்வியல் நூல்களின் பார்வை, கீழைத்தேயவியல் பார்வை, கோட்பாட்டு விவாதங்கள், கல்விப் புலங்களின் அணுகுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பார்வையை முன்வைக்கிறார் சுரிந்தர் ஜோத்கா.
Book Details
Book Title சாதி - தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் அறிமுகம் (Saathi)
Author சுரிந்தர் எஸ்.ஜோத்கா
Translator பக்தவத்சல பாரதி (Bhakthavachala Bharathi)
ISBN 9789355231444
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 136
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, ஆய்வு அறிக்கை | Study Report, Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்றுவரை வெளிவந்த காலச்சுவடு இதழ்களிலேயே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்ற இதழ் என்று அவ்விதழைச் சொல்லலாம். அச்சிறப்பிதழில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்தி மேலும் சில கட்டுரைகளை இணைத்து நூலாக்கும் பணியை பேரா. பக்தவத்சல பாரதி ஏற..
₹451 ₹475
ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடைய முன் வரையறைகளிலிருந்து வெளியேறி நிற்பது இந்நூலின் சிறப்பம்சம். மானிடவியல் தழைத்துவந்த விதம் பற்றி நாம் பேசுவதைவிட, வரலாறு தானே பேசிக்கொள்வதை இந்நூல..
₹309 ₹325
தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் என்ன தொடர்பு? உலகம் குழந்தையாய் இருந்த போது தோன்றிய பழங்குடி மக்கள் இதை அறிய உதவுகிறார்கள். இந்த நூல், பழங்குடியினர் பற்றிய வரையறையில் தொடங்கி அவர்களின் அடையாளச் சிக்கல்கள், சமூக வாழ்க்கை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மானிடவியல் நோக்கில் விவாதிக்க..
₹314 ₹330
மானிடவியல் என்பது புத்தகவாசிப்பு, மண்வாசிப்பு, மனிதவாசிப்பு ஆகியமூன்றும் சேர்ந்ததாகும். தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனிதவாசிப்பினை நிறைவு செய்யவில்லை. பக்தவச்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக்குறையை நிறைவு செய்கின்றன. - முனைவர் தொ. பரமசிவன்..
₹428 ₹450