Menu
Your Cart

கனவு வெளிப் பயணம்

கனவு வெளிப் பயணம்
-5 %
கனவு வெளிப் பயணம்
சல்மா (ஆசிரியர்)
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாம் சார்ந்திருக்கும் சமூகம் பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை சல்மாவின் படைப்புக்களை வாசித்துப்பார்த்தால் தெரியும் என்ற அளவிற்கு அவலங்களை அம்பலத்தில் ஏற்றிய எழுத்துக்கள் சல்மாவினுடையவை. தமிழ்நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மா. பெண் என்ற காரணத்தினால் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் ஒரு சமூகத்தில் இருந்து வெளிப்பட்டு அடக்குமுறைகளுக்கு எதிராக தனது படைப்புகளின் மூலம் குரலெழுப்பி வருபவர். இவரைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. பெண்கள் தங்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கும் முயற்சிகளில் எத்தனை தடைக்கற்கள்? அத்தனையையும் உடைத்துக் கொண்டு வருபவர் சல்மா. தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து எழுதி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டவர். மதத்தின் பெயரால் அடக்கப்பட்ட, ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பெண் சமுதாய விடுதலைக்கான வெளிச்சமாக சல்மா தனது இலக்கியப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரது வெளியுலக பயண அனுபவத் தொகுப்பே இந்த நூல். கட்டுக்கோப்பான ஒரு மதத்தில் பிறந்த ரொக்கையா பீவியாக (இயற்பெயர்) இருந்த சல்மா, உலக பயணம் மேற்கொண்டது எப்படி? அதில் எத்தனை எதிர்ப்புக்கள்? எத்தனை சுவாரசியங்கள்? பக்கத்து ஊருக்குக் கூட தனியாக செல்லமுடியாத சல்மா, வீட்டுக்குத் தெரியாமல் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தது எப்படி? சல்மாவின் வெளியுலக பயண அனுபவங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல... வாழ்க்கைக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வாசியுங்கள்... வசப்படுவீர்கள்!
Book Details
Book Title கனவு வெளிப் பயணம் (Kanvu Veli Payanam)
Author சல்மா (Salma)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்நாவலில் நாயகர்கள் / நாயகிகள் / வில்லன்கள் என எவருமில்லை. அந்த விதத்தில் மிகவும் ஜனநாயகப் பண்பு கொண்டதாக இருக்கிறது இந்தப் பிரதி. இதன் காரணமாக அதிகாரத்துக்கு எதிரானதொரு அமைப்பைக் கொண்டதாக இந்தப் பிரதி விளங்குகிறது. பின் நவீனத்துவப் பிரதியொன்றில் காணக் கிடைக்கும் சாதகமான இந்தப் பண்புகள் மிக இயல..
₹570 ₹650
சல்மாவின் கதை வெளிகள் பெண்களின் பதற்றமான காலடிகளின் மெல்லிய சப்தங்களால் நிரம்பியவை. அவர்களது கண்ணீரால் ஈரமானவை. மதிப்பீடுகளின் கனத்த சுவர்களால் சூழப்பட்ட வீடு என்னும் வெளிகளுக்குள் பட்டாம்பூச்சிகளைப் போலவும் பொன்வண்டுகளைப் போலவும் பறந்து திரியும் சல்மாவின் பெண் பாத்திரங்கள் மிகச் சிறிய அவ்வெளிகளு..
₹166 ₹175
சமூகம், அரசியல் மற்றும் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் உடையவை, இல்லாதவை என நவீன கவிதைகளைப் பிரித்தால் இரண்டாம் வகையில் சல்மா வின் கவிதைகள் அடங்கும். துணிச்சலும், நளினமும் சல்மாவின் கவிதைகளில் தெரிகின்றன. கவனிப்பைத் தக்கவைக்கும் கவிஞர் சல்மா. ஞானக்கூத்தன்..
₹119 ₹125
தமிழில் எழுதிவரும் குறிப்பிடத்தக்க இளம் கவிஞர் சல்மா. பெண் கவிதை மொழி சார்ந்து இவரது படைப்புகள் புதிய தடங்களை உருவாக்குபவையாக உள்ளன. இவரது கவிதைகள் ‘சுட்டும் விழிச்சுடர்,’ ‘நிகழ்,’ ‘காலச்சுவடு,’ ‘இந்தியா டுடே’ முதலிய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது பெரும்பாலான கவிதைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் ம..
₹105 ₹110