- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788199250734
- Page: 206
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: சால்ட் பதிப்பகம்
பச்சைப் பட்டுப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்த ஒரு எட்டு வயதுச் சிறுமி குதூகலமாய் துள்ளல் நடையுடன் தாவித் தாவி அவனைக் கடந்து செல்கிறாள். அவன் ஒரு கணம் நின்று அவள் துள்ளிச் செல்லும் அழகைப் பார்க்கிறான். அவள் திரும்பி அவனைப் பார்த்து, ஒரு தேவ மலரைப் போல வசீகரமாகப் புன்னகைத்தாள். அவன் நிற்குமிடத்துக்கு இரண்டு படிக்கட்டுகளுக்கு மேலாக நின்றுகொண்டிருந்த சிறுமி, தன் கை விரல்கள் அசைத்து அவனை அழைத்தாள். தேவ மலர் தன் இதழ்கள் விரித்துக் கூப்பிடுவது போலிருந்தது. அதன் ஒரு இதழை லேசாகத் தொட்டுக்கொண்டு நகர முடிந்தால் தன் பயணம் தடையின்றி நிகழ்ந்தேறும் என்ற இறுதி நம்பிக்கை துளிர்த்தது. அவன் நம்பிக்கையோடு அடுத்த அடி எடுத்து வைத்தான். அப்போது சிறுமி இன்னுமொரு படி மேலேறியிருந்தாள். அவனால் சிறுமியுடைய விரல்களைத் தொட முடியாதபடி அவன் ஒரு எட்டு வைப்பதும் சிறுமி ஒரு படி மேலேறி நிற்பதுமென மேலும் சில படிகளை அவன் கடந்தான். ஆனால் இந்த விளையாட்டும் அவனை மிக சீக்கிரமாகவே களைப்படையச் செய்தது. அவன் நின்றுவிட்டிருந்தான். அவனுடைய கண்கள் இருள்வது போலிருந்தது. அவன் ஏதோ ஒரு உந்துதலில் சிறுமியின் விரல்களைப் பற்றிவிட ஒரு தாவு தாவினான். அடுத்த கணம், அவன் தாவி நின்ற படிக்கட்டு பலத்த சத்தத்துடன் முறிந்தது. பெருத்த அலறலுடன் அவன் உடல் வேக வேகமாக இறங்கிக்கொண்டிருந்தது. எந்த நேரமும் அவன் தலை தரையில் மோதிச் சிதறலாம்...
(நாவலிலிருந்து)
| Book Details | |
| Book Title | வீடு வெளி (Veetu Veli) |
| Author | சி.மோகன் (C. Mohan) |
| ISBN | 9788199250734 |
| Publisher | சால்ட் பதிப்பகம் (Salt publications) |
| Pages | 206 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், 2026 New Releases |