Menu
Your Cart

வலைவிரிக்கும் இந்துத்துவம்

வலைவிரிக்கும் இந்துத்துவம்
-5 %
வலைவிரிக்கும் இந்துத்துவம்
பத்ரி நாராயண் திவாரி (ஆசிரியர்), சரவணன் (தமிழில்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
" தலித் வாக்கு வங்கியைத் தன் பக்கம் திரட்ட இந்துத்துவச் சக்திகள் என்ன செய்கின்றன? எம்மாதிரியான புனைவுகளை உருவாக்குகின்றன? தலித்துகளின் தொன்மங்களையும் புராணங்களையும் எப்படித் திரிக்கின்றன? தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி எப்படி முயற்சிக்கிறது? இதனால் உத்தரப் பிரதேச அரசியலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன? தலித் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி இதனை எப்படி எதிர்கொள்கிறது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை விரிவாக ஆய்வு செய்கிறது இந்தப் புத்தகம். ஆசிரியர் பத்ரி நாராயண் திவாரியும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் களப்பணி மூலம் திரட்டிய தகவல்களைக் கொண்டு இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. வரலாறு, அரசியல், மானுடவியல், தலித்தியம் போன்ற துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பயன்படும் முக்கியமான நூல் இது. பத்ரி நாராயண் திவாரி, அலகாபாத்தில் உள்ள கோவிந்த் வல்லப் பந்த் சமூக அறிவியல் நிறுவனத்தில், சமூக வரலாறு மற்றும் கலாசார மானுடவியல் துறை பேராசிரியராக உள்ளார். தலித் ஆதார மையத்தின் பொறுப்பாளராகவும் பணியாற்றுகிறார். பல ஆய்வுகளைச் செய்துள்ள இவர், வரலாறு, இலக்கியம், சமூக அறிவியல் ஆகியவை தொடர்பாக இந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுதி வருபவர். பல்வேறு அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆலோசகராகப் பணியாற்றும் இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். "
Book Details
Book Title வலைவிரிக்கும் இந்துத்துவம் (Valaivirikkum Hindutvam)
Author பத்ரி நாராயண் திவாரி (Padhri Naaraayan Thivaari)
Translator சரவணன் (Saravanan)
ISBN 9788184933932
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 184
Year 2011

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘மா மழை போற்றுதும் மா மழை போற்றதும்’ என்கிறது சிலப்பதிகாரம். மா மழையின் மனோகரமான பின்னணியில், ‘மனத்தில் விழுந்துவிட்ட காதலின் நிழலைச் சொற்களாக மாற்றி நிஜமாக்க’ முனைந்திருக்கிறார் சரவணன், இத் தொகுப்பிலுள்ள கவிதைகளின் மூலம். நவீன கவிதையில் இருண்மையும் எளிமையும் அதன் பொருளம்சம் சார்ந்தது. சரவணனின..
₹38 ₹40