Menu
Your Cart

சீர்த்திருத்த போலிகள்

சீர்த்திருத்த போலிகள்
-3 %
சீர்த்திருத்த போலிகள்
ம.பொ.சிவஞானம் (ஆசிரியர்)
₹29
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு பொருளுக்கு மக்களிடையே மதிப்பு ஏற்படும்போது அதைப்போன்ற போலி ஒன்றும் கூடவே தோன்றும். இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். சான்றாக, கதர் வாணிபம் நன்றாக நடக்கிறதென்றால், சில மோசக்கார வியாபாரிகள் போலிக்கதர் தயாரித்து மக்களை ஏமாற்றுவார்கள். அதுபோலவே சீர்திருத்தக் கொள்கைக்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறதென்றால், அதைக்கொண்டு வயிறு வளர்க்க போலிச் ‘சீர்திருத்த வாதிகள்’ புறப்பட்டு விடுகின்றனர். அரசியலுக்கு கட்சி அமைக்கலாம். கடவுள் நெறியைப் பரப்புவதற்கும் ஸ்தாபனங்கள் நடத்தலாம். ஆனால் சமூக சீர்திருத்தப் பிரச்சாரம் மூட நம்பிக்கையை எதிர்க்கும் புரட்சி தனிப்பட்ட அறிஞர்களால் நடத்தக்கூடியதேயன்றி கட்சி வைத்துப் பிரச்சாரம் செய்யக்கூடியதன்று. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று டிக்கெட்டை வைத்து மாநாடு நடத்தி சினிமாவுக்குக் கதை எழுதி, அதுதான் சீர்திருத்தம் என்று பறையடிப்பதுமல்ல. சரியாகச் சொன்னால் செயலிலும் சரி. பிரச்சாரத்திலும் சரி, சீர்திருத்தவாதிகள் தேசிய முகாமில்தான் தோன்றியுள்ளனர்; இன்னமும் தோன்றி வருகின்றனர். தேசபக்த வாட்டாரந்தான் சீர்திருத்தவாதிகள் தோன்றுவதற்குச் சரியான முகாமாகும். தேச மக்களின் நலன்களை அந்நியர்களுக்கு விற்றுக் கொடுத்துத் தன்னலத்தைப் பேணும் தேசத் துரோகிகள், சீர்த்திருத்தப் போலிகள் தோன்றலாம்.ஆனால் அவர்களை மக்கள் மதிக்க மாட்டார்கள்.
Book Details
Book Title சீர்த்திருத்த போலிகள் (Seerthirutha poligal)
Author ம.பொ.சிவஞானம் (Ma.Po.Sivagnaanam)
Publisher அகநாழிகை (Aganazhikai)
Pages 40
Published On Jan 2013
Year 2013
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார். இப்படி, மூன்று வகையான ஒருமைப்பாட்டினை அடிகளார் வலி..
₹418 ₹440
தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால அரசியலிலே சாதி உணர்ச்சி தலைதூக்கி நின்றிருக்கிறது. சனநாயகப்படி நடந்த பொதுத் தேர்தல்களிலே, அரசியல் கட்சிகளின் வெற்றி - தோல்விகளை நிர்ணயிப்பதிலேயும் இந்த சாதி உணர்ச்சியே செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. இதனால் தமிழினத்தின் ஒற்றுமை பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ..
₹190 ₹200