Menu
Your Cart

சுப்ரமணிய ராஜூ கதைகள்

சுப்ரமணிய ராஜூ கதைகள்
-5 %
சுப்ரமணிய ராஜூ கதைகள்
சுப்ரமணிய ராஜு (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுப்ரமண்ய ராஜு வாழ்ந்த காலம் (6.6.1948 - 10.12.1987), எழுதியவை இரண்டுமே கொஞ்சம்தான். ஆனால் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்தாளர் அவர். அவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் முதல் இன்றைக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும் தலைமுறைவரை அவரைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் செய்கிறார்கள். 'காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு இருபத்தைந்து சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பத்துதான் தேறி இருக்கின்றன. அதில் சுப்ரமண்ய ராஜூவின் கதை ஒன்று' என்று சுஜாதா சொன்னதை எண்ணிப் பார்க்கலாம். 'இன்று நிஜம்' என்கிற ஒரு தொகுப்புதான் ராஜு வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது புத்தகம். புத்தகமாகவே ஆகாமல் வேறு எத்தனையோ பல கதைகள் பத்திரிகைத் தாள்களுக்குள் பல வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன. அவருடைய கதைகளின் இந்த முழுத்தொகுப்பு, ராஜுவுக்குச் செலுத்தும் அஞ்சலி மட்டுமல்ல. எதிர்வரும் தலைமுறைக்கு ஒரு தலைசிறந்த எழுத்தாளரை மறு அறிமுகப்படுத்தும் ஓர் எளிய முயற்சியும் கூட. பாண்டிச்சேரியில் பிறந்தவரான சுப்ரமண்ய ராஜு (இயற்பெயர் விஸ்வநாதன்), சென்னை சுந்தரம் க்ளைடன் மற்றும் டி.டி.கே. நிறுவனங்களில் பணியாற்றியவர். மனைவியும் இரு பெண் குழந்தைகளும் அவருக்கு உண்டு. சென்னை நந்தனம் சிக்னல் அருகே நடந்த ஒரு மோசமான சாலை விபத்தில் உயிரிழந்தபோது அவருக்கு வயது 39 மட்டுமே.' Subramanya Raju lived a short life, but his writings influenced a whole generation. Not only his followers but also his predecessors celebrate him. This is a compelete collection of his stories and a tribute to him in deed. It is also our simple effort to introduce one of the best writers to posterity.
Book Details
Book Title சுப்ரமணிய ராஜூ கதைகள் (Subramanya Raju Kathaigal)
Author சுப்ரமணிய ராஜு (Subramaniya Raju)
ISBN 9788183681346
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 488
Published On Nov 2005
Year 2006
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author