Menu
Your Cart

சுற்றமும் சூழலும் நட்பும்

சுற்றமும் சூழலும் நட்பும்
-5 % Available
சுற்றமும் சூழலும் நட்பும்
கு.சிவராமன் (ஆசிரியர்)
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாம் தொலைத்து வருவது நல்ல உணவு, நல்ல உடலுறுதி, நல்ல உள்ள மகிழ்வு, நல்ல சுற்றுச்சூழல். பாரம்பரிய எச்சங்களை, அறம்சார் அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை. - மருத்துவர் கு.சிவராமன். இயற்கையை மீறி நடக்கும் செயல்கள் யாவும் சிறப்புடன் அமைந்ததில்லை என்று சரித்திரம் சொல்கிறது. அது உணவுக்கும் பொருந்தும், மருத்துவத்திற்கும் பொருந்தும். உடலே உயிர்.. உணவே மருந்து என்ற திட நுட்பமான உண்மை விளங்கினால் நோயற்ற வாழ்வு நிச்சயம். அவசர கதியான உலகில் மனித வாழ்வியலில் எங்கு நோக்கினும் கலப்படம் என்பது இரண்டற கலந்துவிட்டது. இதன் விளைவு புதிய புதிய நோய்களின் உற்பத்தி. இயற்கை விதிகளை மீறி சூழலை மாசுபடுத்துவதின் விளைவாக விளையும் பாதிப்புகள் மனிதகுல அழிவுக்கு வழிவகுக்கும். இந்த பேரபாயத்தை நாம் உணர வேண்டும். உணவும், சூழலும், மருத்துவமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ‘பாரம்பரிய அனுபவங்களைக் கட்டவிழ்க்க, பாரபட்சமற்ற பாரம்பரிய மருத்துவப் புரிதலும் வேண்டும்; நவீன விஞ்ஞான ஆய்வுகளும் வேண்டும். இரண்டில் எது குறைந்தாலும் விடை கிடைக்காது. இங்கே முட்டுக்கட்டையாக இருப்பது இரண்டின் ஒருங்கிணைந்த பார்வையும் இல்லாததுதான்’ என்கிறார் மருத்துவர் கு.சிவராமன். இயற்கையோடு இணைந்த வாழ்வே பெருவாழ்வு. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக, கலப்படம் அற்றதாக இருக்க வேண்டும். அதனை உற்பத்தி செய்யும் நிலத்தை பாதுகாக்க வேண்டும். நமக்கெல்லாம் சோறுபோடும் விவசாயி வயிறு நிரம்ப வேண்டும். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும். ‘சுற்றமும் சூழலும் நட்பும்’ என்ற இந்தப் புத்தகத்தில் நம் நிகழ்கால வாழ்வுக்கும், எதிர்கால வாழ்வாதாரத்திற்கும் அடிப்படை என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். ‘நலவாழ்வுக்கு நல்ல தூக்கமும் அக மகிழ்வும் இயல்பாய் நிகழும் வாழ்வியல் வேண்டும். அதற்கு வாழ்வின் உயரங்களை விட சம நிலங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். பாரம்பரியம் பலகாலமாய்க் கற்றுக் கொடுத்தது அதைத்தான்’ எனும் கு.சிவராமன் நம் வாழ்வை நெறிப்படுத்தும் முறைகளையும் வகுத்தளிக்கிறார். வாருங்கள் நாமும் அவரோடு இணைவோம். நம் பாரம்பரியம் காக்க...
Book Details
Book Title சுற்றமும் சூழலும் நட்பும் (Suttram Soolalum Natpum)
Author கு.சிவராமன் (K.Sivaraman)
ISBN 9788184766448
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Category Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆறாம் திணை- பாகம் 2 - மருத்துவர்.கு.சிவராமன்:ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளைக் கொஞ்சம் அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் காக்கலாம் என்..
₹200 ₹210
நலம் காக்க வாங்க வாழலாம்...சித்த மருத்துவம் பழந்தமிழரின் அறிவியல், நலவாழ்வு நாகரீகத்திற்கான தேடலில் விளைந்த அனுபவ உண்மைகளின் அடிப்படையில் உருவான அறிவியல் உடலும் மனமும் ஒருங்கே நலம் பெற்றால்தான் நலவாழ்வு சாத்தியம் என்ற இன்றைய வாதத்தின் நேற்றைய விளக்கம் சித்த மருத்துவம். இன்னமும் இன்றைய அறிவியலின் ஆய்..
₹380 ₹400