Menu
Your Cart

இலங்கையில் சிங்களவர்

இலங்கையில் சிங்களவர்
-5 %
இலங்கையில் சிங்களவர்
பக்தவத்சல பாரதி (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இலங்கை என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தமதமும் இனப் பிரச்சினையும்தான். ஆனால் இன்றைய இலங்கை சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தனித் தீவல்ல, இந்தியாவின் நீட்சியாகவே இருந்தது. அப்படியானால் சிங்களவர் யார், அவர்களின் பூர்வீகம் என்ன, எங்கிருந்து சென்றார்கள் போன்ற வினாக்களுக்கு பக்தவத்சல பாரதியின் இந்நூல் சமூக-பண்பாட்டு மானிடவியல் நோக்கில் விடையளிக்கிறது. இதை, சிங்கள மொழி, சிறீலங்கா உருவாக்கம், இனத்துவம் போன்றவற்றினூடாக சிங்களவர்களின் பண்பாடு, சாதிமுறை, திருமணம், அவர்களிடையே நிலவும் உறவுமுறை முதலியவற்றையும் தனித்தனி இயல்களில் காட்சிப்படுத்துகிறார். சிங்களவர்கள் இந்திய இனத் தொடர்ச்சி கொண்டவர்கள் என்றாலும் மரபணு (டிஎன்ஏ) ரீதியான நெருக்கம் தமிழர்களுடன்தான் அதிகம் என்றும், அவர்கள் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சி கொண்டவர்கள் என்றும் பாரதி கூறுவது ஆர்வமூட்டுவதாய் இருக்கின்றன. இதற்காக சிங்களவர்கள் பௌத்தர்களாயினும் பத்தினித் தெய்யோ (கண்ணகி), கதரகமத் தெய்யோ (முருகன்) உள்ளிட்ட இன்னும் பல தமிழ்த் தெய்வங்களை எவ்வாறு வழிபடுகின்றனர் என்பதில் தொடங்கி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள உறவையும் திராவிட உறவுமுறையை அவர்கள் பின்பற்றும் விதத்தையும் விவரிக்கின்றார். மேலும் சிங்களவர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசினாலும் தமிழ் இலக்கண மரபைப் பின்பற்றும் விதத்தையும் அவர்களின் இயல், இசை, நாடகத்தில் திராவிடத்தின் தாக்கம் பெற்றுள்ளதையும் பாரதி தமது களப்பணி அனுபவத்தின் மூலம் விவரிப்பது இனப்பகையூட்டப்பட்டச் சூழலில் புதிய வெளிச்சத்தைத் தருவதாய் இருக்கின்றது. இதன் மூலம் இனவேறுபாடுகளுக்கு அப்பால் அறிவார்ந்த புதிய உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம். இவையே இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
Book Details
Book Title இலங்கையில் சிங்களவர் (Ilangaiyil Singalavar)
Author பக்தவத்சல பாரதி (Bhakthavachala Bharathi)
ISBN 9788177202441
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 190
Year 2016
Category கட்டுரைகள், மானுடவியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்றுவரை வெளிவந்த காலச்சுவடு இதழ்களிலேயே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்ற இதழ் என்று அவ்விதழைச் சொல்லலாம். அச்சிறப்பிதழில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்தி மேலும் சில கட்டுரைகளை இணைத்து நூலாக்கும் பணியை பேரா. பக்தவத்சல பாரதி ஏற..
₹451 ₹475
ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடைய முன் வரையறைகளிலிருந்து வெளியேறி நிற்பது இந்நூலின் சிறப்பம்சம். மானிடவியல் தழைத்துவந்த விதம் பற்றி நாம் பேசுவதைவிட, வரலாறு தானே பேசிக்கொள்வதை இந்நூல..
₹309 ₹325
தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் என்ன தொடர்பு? உலகம் குழந்தையாய் இருந்த போது தோன்றிய பழங்குடி மக்கள் இதை அறிய உதவுகிறார்கள். இந்த நூல், பழங்குடியினர் பற்றிய வரையறையில் தொடங்கி அவர்களின் அடையாளச் சிக்கல்கள், சமூக வாழ்க்கை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மானிடவியல் நோக்கில் விவாதிக்க..
₹314 ₹330
மானிடவியல் என்பது புத்தகவாசிப்பு, மண்வாசிப்பு, மனிதவாசிப்பு ஆகியமூன்றும் சேர்ந்ததாகும். தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனிதவாசிப்பினை நிறைவு செய்யவில்லை. பக்தவச்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக்குறையை நிறைவு செய்கின்றன. - முனைவர் தொ. பரமசிவன்..
₹428 ₹450