- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788199180468
- Page: 182
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: சீர்மை நூல்வெளி
தமிழ்த் திரைப்பட நாயகன் என்பவன் வெறும் நடிகன் மட்டுமல்லன். அவன் வரலாற்றுரீதியாகத் திராவிடக் கருத்தியலாலும், வெகுஜன திரைப்பட ஆக்கத்தின் அழகியல் பண்புகளாலும், அதனோடு தொடர்புடைய திரைப்பட-அரசியல் கட்டமைப்புகளாலும் வடிவமைக்கப்படுகிறான். இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் வெற்றிகரமாக இயங்கும் பட்சத்தில், வெகுஜன மக்களின் பிரதிநிதியாக அவன் வெளிப்படுகிறான்.
விஜயின் நட்சத்திரப் பிம்பக் கட்டமைப்பு, அதீத ஊடகமயப்பட்ட சூழலில் அவரின் இயங்குமுறை, இந்து தேசியச் சூழலில் அவரின் அரசியல் செயற்பாடு, தமிழ்நாட்டின் சமகால வெகுஜனவிய அரசியலில் விஜயின் பங்கு, மாறியிருக்கும் அரசியல் தொடர்பியலில் அவரின் உத்திகள் முதலானவற்றை ஊடகவியல், சமூகவியல், பண்பாட்டியல் ஆகியவற்றின் வழியாக ஆராய்ந்திருக்கிறது இந்நூல். அந்த வகையில், விஜயின் பிம்பச் சிறையில் வெகுமக்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பதைப் பேசும் இந்நூல், அதற்கான கலாச்சாரக் காரணங்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
| Book Details | |
| Book Title | ஜன நாயகன்: பிம்பச் சிறை 2.0 (Jana Naayakan: Pimpach Chirai 2.0) |
| Author | ர.முகமது இல்யாஸ் |
| ISBN | 9788199180468 |
| Publisher | சீர்மை நூல்வெளி (Seermai Noolveli) |
| Pages | 182 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Politics| அரசியல், Cinema | சினிமா, TamilNadu Politics | தமிழக அரசியல், Indian politics | இந்திய அரசியல், தமிழகம், 2025 New Arrivals |