Menu
Your Cart

தேவதூதர் & தேவதூதரின் தோட்டம்

  தேவதூதர் & தேவதூதரின் தோட்டம்
தேவதூதர் & தேவதூதரின் தோட்டம்
கலீல் ஜிப்ரான் (ஆசிரியர்)
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கிழக்கும் மேற்கும் கொண்டாடும் ஞானியாக விளங்கிய கலீல் ஜிப்ரான் லெபனான் நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர். 48 ஆண்டுகள் (1883-1931) ஒரு மின்னல் கீற்றுப் போல் வாழ்ந்து மறைந்தவர். 1923 இல் அவர் எழுதி வெளிவந்த தேவதூதர் (The Prophet) உன்னத இலக்கியவாணர் வரிசையில் அவரை உடனடியாகக் கொண்டு சேர்த்தது. பன்முறை உலகத்து மொழிகளில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புக்கும் பெருமைக்கும் உரியது தேவதூதர் நூல். இன்னொரு காலத்துக்கும் இன்னொரு உலகத்துக்கும் நம்மை ஈர்த்துச் சென்று விடுகிற ஆற்றல் கலீல் ஜிப்ரானின் தரிசனம் என்று கூறத்தக்க தேவதூதர் நூலுக்கு உண்டு. இதே நூலில் பெரிதும் வாசகர்கள் அறிந்திராத தேவதூதரின் தோட்டம் (The Garden of the Prophet) என்ற சிறு நூலும் இணைக்கப்பட்டுள்ளது. தேவதூதரின் தோட்டம் அழகிய தொடர்ச்சியாக விளங்குவதால், அந்நூல் இந்நூலுடன் இணைந்து வெளியிடப்படுகிறது
Book Details
Book Title தேவதூதர் & தேவதூதரின் தோட்டம் (the-prophet-the-garden-of-the-prophet)
Author கலீல் ஜிப்ரான் (Kaleel Jipraan)
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Pages 150
Year 2019
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இயற்கையின் கவிஞனாக விளங்கிய கலீல் ஜிப்ரானை அவருடைய உயிர் நண்பர் மிகையீல் நைமி ‘இரவின் கவிஞன், தனிமையின் கவிஞன் ஆன்மாவின் கவிஞன், கடலின் புயலின் கவிஞன்’ என்று பெருமைப்படுத்துவார். ‘மிர்தாதின் புத்தகம்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய மிகையீல் நைமி அரபி மொழியில் எழுதிய ஜிப்ரானின் வரலாற்று நூல் இது. உயிர..
₹150