Menu
Your Cart

திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் புதிய கண்டறிதல்கள் (தொகுதி-1)

 திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள்  புதிய கண்டறிதல்கள் (தொகுதி-1)
New -5 %
திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் புதிய கண்டறிதல்கள் (தொகுதி-1)
ச. பாலமுருகன் (தொகுப்பாசிரியர்), சி.பழனிசாமி (தொகுப்பாசிரியர்), சிற்றிங்கூர் மு.ராஜா (தொகுப்பாசிரியர்)
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மிகக் குறைவான போக்குவரத்து வசதிகள் இருந்த காலக்கட்டத்தில் திருவண்ணாமலை செங்கம் பகுதிகளில் கல்வெட்டுகள் ஆய்வு மேற்கொண்டது. அதன் நோக்கம் நடுகற்களை ஆவணப்படுத்துவதாக இருந்தது. எனவே, பிற கல்வெட்டுகள் கவனம் பெறவில்லை. இன்று திருவண்ணாமலைக் குழுவினர் அனைத்துக் கல்வெட்டுகளையும் ஆவணப்படுத்துவதால் நிறையக் கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. அவை இப்போது முதற் கல்வெட்டு தொகுதியாக (புதிய கண்டறிதல்கள்) என்ற துணைத் தலைப்புடன் வெளிவருகிறது. கல்வெட்டுகளோடு நில்லாமல் செப்பேடுகள், சுவடிகள், பாறை ஓவியங்கள், தொல்லியல் சின்னங்களை ஆவணப்படுத்துவதும், கருத்தரங்குகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள். மரபுநடைகள் என்று இக்குழுவின் செயல்பாடுகள் விரிந்துள்ளன. மேலும் சரிந்து புதைந்த நடுகற்களை மேடை அமைத்து பராமரிப்பது ஆகட்டும், அவற்றிற்கு விளக்கப் பலகைகள் எழுதிவைப்பதாகட்டும், அவற்றின் முழு விவரம் இணையத்தில் அறிந்து கொள்ள QR Code இணைப்பதாகட்டும் இக்குழுவினரின் செயல்பாடுகள் வளர்ந்த நாடுகளில் நிகழும் அளவு தனிக்குழு நடவடிக்கைகளாக நிகழ்ந்துள்ளன. -சு.ராஜகோபால்
Book Details
Book Title திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் புதிய கண்டறிதல்கள் (தொகுதி-1) (Thiruvannamalai maavata kalvettukal puthiya kandarithalkal)
Compiler ச. பாலமுருகன் (S.Balamurugan), சிற்றிங்கூர் மு.ராஜா, சி.பழனிசாமி
Publisher திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் (Thiruvannamalai varalartu aaivu naduvam)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Archeology | தொல்லியல், Essay | கட்டுரை, 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha