Menu
Your Cart

திருவாழி

திருவாழி
-5 %
திருவாழி
மீரான் மைதீன் (ஆசிரியர்)
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மீரான் மைதீன் கதைகளின் கதைசொல்லி கதைகளின் மைய இழையில் நம்மையும் பிணைத்து நிற்கச் செய்யும் அசாத்தியமான திறன் மிக்கவர். அவர் கதைகள் இயற்கை, இடம், காலம், வெளி, மாந்தர் எனும் அனைத்து நிலைகளின் வளர்-சிதை இயல்புகளினூடே நகர்ந்து செல்பவை. அவை மிகைத்தன்மையோ மாந்திரீகத்தனமோ கொண்டு அலைபவை அல்ல. நாம் தினமும் கடந்து போகின்றவைதான். ஆனால் பார்க்கத் தவறியவற்றை அவ்வவற்றின் கோணங்களினூடே நம் கவனித்திற்குக் கொணர்ந்து உரையாட அழைத்து மீளப் பார்க்கக் கோருபவை அவை. குமரி மொழியின் கொச்சையும் கேலி-கிண்டலும் சொலவடைகளும் நிறைந்து ததும்பும் அவரின் கதைமாந்தர்கள் சாதி, மதம், கடந்து சகமனிதர்கள்மீது அன்பும் பரிவும் கொண்டு இயங்குபவர்கள். அதனால் நிறுவனப்பட்ட மதம், சமூகச் சட்டகம், அரசு போன்றவற்றின் முகங்கள் அங்கு கிழிந்து தொங்கும். கண்ணுக்குப் புலனாகாத அன்பினாலும் பரிசுத்த நிலையினாலும் நிறைக்கப்பட்டதே வாழ்வு என்னும் மையச்சரட்டை மீரான் மைதீனின் இந்த நாவல் புலப்படுத்துகிறது. - ச. அனந்த சுப்பிரமணியன்
Book Details
Book Title திருவாழி (Thiruvazhi)
Author மீரான் மைதீன் (Meeran Mohideen)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும் வாப்பாக்கள் இருக்கிறார்கள். அவர்க..
₹356 ₹375
இஸ்லாமிய சமூகத்தின் இருவேறு உலகங்களின் இயல்புகளைச் சொல்லுகிறது மீரான் மைதீனின் நாவல். பொருளாசையும் தரித்திரமும் கொண்ட இருவேறு மனித இயற்கைகளின் மோதலில் முன் நகர்கிறது இதன் கதையோட்டம். காணும் செல்வத்தையெல்லாம் தன்னுடைய தாக்கிக்கொள்ளும் ஹமீதுசாகிபு. வறியவனான குச்சித் தம்பி இருவருக்கும் இடையில் நட..
₹276 ₹290
ஒரு கனாபோல் நம்மைக் கடந்தோடும் காலத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் காலத்தின் கரைதல் மட்டுமல்ல; அவை நம் மனத்தின் ஈரத்தையும் துடைத்துச் செல்கின்றன. வெறுமையாக நம்மைச் சூழப்போகும் தருணங்களை உடைத்தெறிந்து மீண்டும் நமக்குள் பசும்புல்போல் தழைக்க வைப..
₹95 ₹100