Menu
Your Cart

தூப்புக்காரி

தூப்புக்காரி
-5 % Out Of Stock
தூப்புக்காரி
மலர்வதி (ஆசிரியர்)
₹214
₹225
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘துப்புரவுத் தொழிலாளியின் தொழில் சூழலின் தனித்தன்மை, மிகுந்த உக்கிரத்துடன் நாவலில் உணர்த்தப்படுகிறது. தகழியின் ‘தோட்டியின் மகன்’ நாவலை வாசித்துக்-கொண்டிருப்பதாக ஒரு பிரமை தட்டியது…. கதைப்பயணம் செய்கிற களங்களும், மனித மனங்களும், மொழி பிரயோகங்களும், நம்மை வாரிச்சுருட்டி அள்ளிக் கொள்கிற வசீகரமும் நம்பகத்தன்மையும் மிக்கதாக இருக்கின்றன. நாவல் சாதிய வேறுபாடுகளையும், வர்க்க முரண்களையும் ஒரு சேர உணர்த்துகிறது. பிரமிக்க வைக்கிற கலாபூர்வ அழகியலோடு, ஒரு முற்போக்குத் தத்துவ நோக்கில் ஒரு குறிப்பிட்ட பகுதி சமூக எதார்த்தம் நாவலாக, இலக்கியப் படைப்பாக வெளிப்பாடு கொண்டிருக்கிறது.’ – மேலாண்மை பொன்னுசாமி *** ‘இதுவரை வாசகரின் புலனுக்குப் புலப்படாத துண்டு துண்டான பீயையும், திட்டு திட்டான தூமை ரத்தத்தையும் அது ஏற்படுத்தும் அருவருப்பையும்… அழுகிப்போன அழுக்குகள் அள்ளப்படும் போது குபீரென எழும்பும் குடலைப் புரட்டும் வாடையையும்… இப்படி சமூகக் குண்டியைக் கழுவி, குளிப்பாட்டி, பவுடருக்கு பதிலாக பிளீச்சிங் பவுடர் பூசி, ஒப்பனை பண்ணி வாழும் இந்தத் தாய்மாரை இந்த நன்றி கெட்ட சமூகம் நாயிலும் பன்றியிலும் கீழாக நடத்தும் கேவலத்தை, மனித மனதை அழவைக்கும் சித்திரங்களாக, அணு அணுவாக வரைந்து காட்டியிருக்கிறார் மலர்வதி… இது ஒரு காத்திரமான தலித்திய நாவல்; தீவிரமான பெண்ணிய நாவல். மொத்தத்தில் வலிவும் பொலிவும் மிக்க ஓர் எதார்த்த நாவல் என்பது என் கணிப்பு.’ – பொன்னீலன்
Book Details
Book Title தூப்புக்காரி (Thooppukaari)
Author மலர்வதி (Malarvadhi)
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 184
Published On Jan 2023
Year 2023
Edition 05
Format Paper Back
Category Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், Award Winning Books | விருது பெற்ற நூல், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கிராமம் குறித்து ஓர் அழகிய மனச்சித்திரத்தை நாமெல்லாம் சுமந்துகொண்டிருக்கிறோம். ‘காட்டுக்குட்டி’ அந்தக் கனவைத் தகர்ப்பதோடு அசலான கிராமத்தை ரத்தமும் சதையுமாக நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அந்தக் கிராமம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை, பாலியல் சுரண்டல், சமூக ஏற்றத்தாழ்வு, ப..
₹238 ₹250
எப்போதும் தான் தானாக மட்டுமே இல்லாமல் பிறரோடும் தன்னை இணைத்துக்கொள்கிற மனங்களின் கதை. சமூகக் கட்டுப்பாடும் உணர்ச்சிக் கட்டுப்பாடுமாய் வாழ்கிறபோது பிறர் உடலோடு தன்னுடலையும் பிணைத்துக்கொள்கிற அவலங்களையும் இக்கதைகள் பேசுகின்றன. நம் இருப்பு மதிப்பில்லாமல் முடிந்துபோவதைக் காட்டிலும் அந்த இருப்பைக்..
₹166 ₹175