-5 %
Out Of Stock
உடல் ஆயுதம்
புலியூர் முருகேசன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹171
₹180
- Year: 2016
- ISBN: 9789385104459
- Page: 192
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது தமிழ் எழுத்தாளர்களுக்கு எதிரான அடிப்படைவாதிகளின், சாதியவாதிகளின் கலகம் தொடங்கி. பெருமாள் முருகனின் எழுத்தும் சாகடிக்கப்பட்டது. நாம் சோர்ந்திருந்த வேளையில் தலித் எழுத்தாளர் துரை.குணா தன்னுடைய சுயமரியாதையான, உண்மையான எழுத்துக்களுக்காகத் தாக்கப்பட்டார். அதையடுத்து கரூரையடுத்த புலியூரில் எழுத்தாளர் முருகேசன் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவர் உயிர் பிழைத்ததே அரிதானது. ஆனாலும் பெருமாள் முருகனின் எழுத்து செத்துப் போனதைப் போல துரை.குணாவின் எழுத்தும், புலியூர் முருகேசனின் எழுத்தும் செத்துப் போகவில்லை. துரை. குணா தனது ஊரிலேயே இருந்து கொண்டு தொடர்ந்து எழுத்துப் பணியையும், சமுதாயப் பணியையும் ஆற்றி வருகிறார். விரைவில் அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளிவரவிருக்கிறது. புலியூர் முருகேசன் தஞ்சைக்கு இடம் பெயர்ந்த போதிலும் தனது எழுத்தின் வீரியத்தை சற்றும் குறைக்காமல் எழுதி வருகிறார். தான் தாக்கப்பட்டபிறகு இன்னும் வேகம் கொண்டு எழுதி வருகிறார்.
| Book Details | |
| Book Title | உடல் ஆயுதம் (Udal aayutham) |
| Author | புலியூர் முருகேசன் (Puliyur Murugesan) |
| ISBN | 9789385104459 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 192 |
| Year | 2016 |