- Edition: 1
- Year: 2026
- Page: 400
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: தேன் கூடு பதிப்பகம்
ஒரு பெருங்கதை எழுதப்படுவதற்கு முன் ஓர் அதிசயம் நிகழும், எல்லையற்ற வானத்தை ஒரு நாடக மேடையாகச் சுருக்கும் புயலைப் போல் நிகழும் அதிசயம் அது. பெருங்கதை என்ற வெள்ளத்தின் முதற்துளியை ஒரு விரலில் ஏந்துவதைப் போல் ஒரு காட்சியே அந்த அதிசயம்.
'வேந்தே' என்ற பெருங்கதை உருவாகத் தொடங்கிய தருணத்தில் என்னிடமும் அத்தகைய காட்சி ஒன்று இருந்தது.
சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் மகுடம் சூட்டுவதில்லை இயற்கை, மாறாக, புல்தின்னிகளுக்குத்தான் மகுடம் சூட்டி அழகு பார்க்கிறது. மகுடம் என்ற தத்துவத்தை மனிதன், வேட்டையாடப்படும் விலங்கான ஒரு மானின் கொம்பிலிருந்துதான் எடுத்துக்கொண்டிருப்பான்.
ஒரு கற்கால மனிதக் கூட்டத்தின் தலைவன் தன் மகனுக்கு வரலாற்றில் முதன்முறையாக ஒரு மானின் கொம்பை மகுடமாக அணிவிக்கும் காட்சியே என் கண்கள் கண்ட முதல் அற்புதச் சித்திரம். அந்த வேந்தனின் செயலில் உலகை ஆளும் பேராசை கிடையாது. தம் சக மனிதர்களைப் பாதுகாத்து, அவர்களின் நிம்மதியான உறக்கத்திற்காக வேல் பிடித்து வானத்தின் கீழ் நிற்கும் ஒப்புதலையே அவன் தலையில் அணிகிறான். அவன் அழிவுக்கும் தோல்விக்கும் அப்பாற்பட்டவன் என்ற பிரமையை வார்த்து, அவனது சமூகமே அவன் தலையில் மகுடமாகச் சூட்டுகிறது.
உலகின் பெரும் செல்வநாடாகவும், அறிவின் விடிவெள்ளியாகவும், தொழில் நுட்பத்தின் உயர்மேடையாகவும், வீரத்தின் விளைநிலமாகவும், தத்துவங்களைப் பதுக்கும் உச்சிக் கோபுரமாகவும் தமிழகம் விளங்கிய சங்ககாலத்தில் நிகழ்கிறது" 'வேந்தே'. உலக நாடுகளெல்லாம் தமிழகத்திற்கு தம் தங்கச் சுரங்கங்களை விலையாகக் கொடுத்து, கப்பல் கப்பலாக அதன் உற்பத்திப் பொருட்களை அள்ளிச் சென்ற காலம் அது.
| Book Details | |
| Book Title | வேந்தே (பாகம் - 1) (Vaenthae Paakam - 1) |
| Author | ஸ்ரீராம் விஸ்வநாதன் (Sreeraam Visvanaathan) |
| Publisher | தேன் கூடு பதிப்பகம் (Then koodu publications) |
| Pages | 400 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Historical Novels | சரித்திர நாவல்கள், 2026 New Releases |