Menu
Your Cart

யூதாஸின் நற்செய்தி | Yudasinte Suvisesham

யூதாஸின் நற்செய்தி | Yudasinte Suvisesham
-5 %
யூதாஸின் நற்செய்தி | Yudasinte Suvisesham
கே.ஆர்.மீரா (ஆசிரியர்), மோ.செந்தில்குமார் (தமிழில்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வரலாற்றை, அதைக் கட்டமைத்த ஆதிக்கத் தரப்பிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்தும் ஒருசேர எழுதிப்பார்க்கும் ஒரு விளிம்புநிலை வரலாற்று எழுத்தியலை இந்த நாவல் மிகச்செறிவாக வெளிப்படுத்துகின்றது. இரண்டு எல்லைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கொண்டு நிறைத்திருக்கும் நுட்பம் அலாதியானது. அவள் சிறுமியாக இருந்த காலத்திலிருந்து தனது முப்பத்தாறாம் வயதுவரை கரைகாண முடியாத அந்த வரலாற்று எச்சங்களின் பேரலைகளுக்குள் சிக்கி மூச்சு முட்ட அலைந்து திரிகிறாள். பெண் இல்லாத ஒரு வரலாறு உண்டா? ஆனால் எல்லா வரலாறுகளும் ஆண் வரலாறுகளாகவே எழுதப்பட்டுள்ளன. இங்கே வலிமை நிறைந்த பெண்ணைப் படைத்து நெருக்கடிநிலைக்கால வரலாற்றுக் காலத்துக்குள் உலவவிட்டுள்ளார். அந்தப் பெண்ணின் வீரியத்தைச் சுமந்துவரும் புதிய தலைமுறைப் பெண்ணையும் ஆதிக்க சக்திகளின் கொடுங்கோன்மையைத் தாளாது கொதிக்கும் கதை நாயகியையும் இந்தச் சமூக வரலாற்று எழுத்தில் உயிர்ப்போடு நடமாடவிட்டிருக்கிறார்.  
Book Details
Book Title யூதாஸின் நற்செய்தி | Yudasinte Suvisesham (Yuthasin-narcheithi | Yudasinte Suvisesham)
Author கே.ஆர்.மீரா
Translator மோ.செந்தில்குமார்
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சூர்ப்பனகையில் நம் சமூகத்தின் பல்வகையான பெண்கள் வந்து வந்து போகிறார்கள். அவர்களின் சந்தோசக் கதவுகள் அடைக்கப்படுவதால் மனச்சோர்வில் மூழ்கிப் போகிறார்கள். அன்பின் ஈரம் கசியும் ஒரு வார்த்தைக்காக ஏங்குபவர்களாகவும் செல்லும் இடங்களிலெல்லாம் புறக்கணிக்கபடுவேராகவும் இருக்கிறார்கள்...
₹95 ₹100
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ நாவலைப் படித்து முடித்துப் புத்தகத்தைக் கீழே வைத்த போது இந்தக் கதாசிரியையின் மற்ற படைப்புகளை மீண்டும் படிக்க வேண்டும் என்ற உள் தூண்டுதல் எனக்குள் ஏற்பட்டது. ஒரு கதையின் வாசிப்பு அப்படி ஒரு விருப்பத்தை நம்மிடம் உண்டு பண்ணும் போது, அந்தக் கதைப் படைப்பாளியின் மற்..
₹133 ₹140
கே. ஆர். மீராவின் படைப்பாளுமையில் கனன்றெரிவது பெண்மைதான் என்ற உண்மையை கபர் நாவலும் உறுதிப்படுத்துகின்றது. அதன் தீக்கொழுந்து சுயமரியாதையினுடையது. அந்தச் சுயமரியாதை மனிதத்தன்மையின் ஒளிர்வேதான் என்ற புரிதலுக்குக் கபர் வாசகரைக் கொண்டு சேர்க்கிறது. – பேரா. எம்.கே. ஸானு தனிப்பட்ட வாழ்க்கை முதல் தேசிய வர..
₹143 ₹150
ஆராச்சார்: மேற்குவங்கத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தொழிலை நூற்றாண்டுகளாக பரம்பரைத் தொழிலாகச் செய்துவரும் ஒரு குடும்பத்தைக் குறித்து எழுதப்பட்ட மலையாளப் புதினம். அக்குடும்பத்தில் ஒருத்தியான இருபத்தியிரண்டு வயது இளம் பெண் சேதனாவின் பார்வையில் கொல்கத்தாவின் வரலாறும் நிகழ்காலமும் ஊடாட, காதலின் தூக்..
₹713 ₹750