Menu
Your Cart

வந்த நாள் முதல்

வந்த நாள் முதல்
New -5 %
வந்த நாள் முதல்
செழியன். (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கணையாழியின் சிறந்த சிறுகதை விருது, (2003) சிறந்த சிறுகதைக்காக 'கதா விருது (2004) சிறுகதையில் காட்சிப்படிமங்கள் என்ற ஆய்வுக்காக மத்திய அரசின் ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது (2004). பரதேசி படத்துக்காக இலண்டனிலும், (2013) டுலெட் படத்துக்காக இத்தாலியிலும் (2018) சர்வதேச அளவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது. டுலெட் படத்துக்காக கொல்கத்தா திரைப்படவிழாவில் சிறந்த இந்தியப் படத்துக்கான விருது, (2018) சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றவர். ஆயிரம் வயலின்களும், லட்சம் புறாக்களும், கோடி பூக்களுமான காதல்களின் காலம் எல்லோருக்கும் இருக்கும். அப்படிக் கடந்து வந்த உணர்வும் உருவமும்தான் இந்த 'வந்த நாள் முதல்!' காதல் என்கிற உணர்வும் காட்சி என்கிற உருவமும் இணைந்த தரிசனம் இந்தப் படைப்பு. காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிடுகிறது. ஆனால் காதல் தரும் நினைவுகள் மட்டும் உள்நாக்கில் ஒட்டிக்கொள்ளும் தேநீர் கசப்பு மாதிரி உள்ளத்தின் அடித்தட்டில் தங்கிவிடுகிறது. எல்லோருடைய இதயத்தின் ரகசிய அறைகளில் வாழும் தேவதைப் பெண்களின் கதைகளை கவிதையாக்கிருக்கிறார் செழியன். பேருந்துகளில், கோயில்களில், திருமண வீடுகளில், தட்டச்சு வகுப்புகளில்... என ஏதோ ஒரு சந்திப்பில் கண்களால் பேசி, மனதால் கலந்து, கனவுகளால் கனிந்து, மௌனத்தையே சாட்சி வைத்து பிரிந்துபோன காதல் தருணங்கள் யாருக்கு இல்லை..? இப்படி ஒருவருக்கல்ல... ஒரு கோடி காதலர்களுக்கு நேர்வதுதான் செழியனின் இந்தக் காதல் வரிகள். சந்திக்கிறபோது கிடைக்கிற சந்தோஷமும் பிரிகிறபோது பெறுகிற வலிகளும்தான் காதலை இன்னும் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. அதை இந்தத் தொகுப்பில் உணரலாம்
Book Details
Book Title வந்த நாள் முதல் (Vandha Naal Mudhal)
Author செழியன்.
ISBN 9788198121141
Publisher வேரல் புக்ஸ் (veral books)
Pages 156
Year 2025
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha