Menu
Your Cart

வெளியேற்றம்

வெளியேற்றம்
-5 %
வெளியேற்றம்
₹741
₹780
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுதந்திரமான வெளியில், வேர் பிடிக்காமல் அலைகிற தனிமனிதனாக என்னை வனைந்துகொள்ளும் பகற்கனவுகள் வெகுகாலம் என்னுடன் இருந்தன. திருமணம் ஆகி, மனதிற்குகந்த மனைவியும் குழந்தைகளும் அமைந்தபிறகு மேற்படிக் கனவுகள் வெளிற ஆரம்பித்துவிட்டன. என்றாலும், வெளியேறியவர்களாகத் தென்படுகிறவர்களை வேடிக்கை பார்ப்பதும், அந்த நேரத்தில் மன ஆழத்தில் ஏற்படும் சிறு நமைச்சலை ஆனந்தமாய் உணர்வதும் நின்றபாடில்லை. தனியர்களாகத் திரியும் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன். வெளிமாநிலப் பிரயாணங்களில், அத்துவான நெடுஞ்சாலைகளில், பித்தர்கள்போல நடந்துகொண்டேயிருக்கும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரேயொரு கணம் அவர்களுடன் என்னைப் பொருத்திப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியும் மிரட்சியும் அடைந்திருக்கிறேன். அந்த ஒரு கணத்தில் காணக் கிடைக்கிற உலகம், பிற வேளைகளில் தென்படுகிற உலகம் அல்ல - பின்னுரையிலிருந்து...
Book Details
Book Title வெளியேற்றம் (Veliyetram)
Author யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்நாவலின் மையம் இசை. இசை, நெருங்கும்போது விலகி விரியும். அகழ்ந்து இறங்கும்போது ஆழ்ந்து செல்லும். இசையில் விரிவையும் ஆழத்தையும் தனது சுயமாக்கிக்கொண்டு வெற்றிபெற்ற கலைஞனின் கதை ‘நினைவுதிர் காலம்’. ஒருவகையில் யுவன் சந்திரசேகர் இசையை மையமாகக்கொண்டு இதற்கு முன்னர் எழுதிய ‘கானல் நதி’ நாவலின் தொடர்ச்..
₹219 ₹230
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் மிகத் தேர்ந்த கதை சொல்லி யுவன் சந்திரசேகர். அதிதீவிரமான படைப்பும் சுவாரசியமாக எழுதப்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரது புனைகதைகள். யுவன் சந்திரசேகரின் ஆறாவது நாவலான ‘பயணக் கதை’ அவருடைய நாவல்களிலேயே உச்சபட்ச வாசிப்பு சுகத்தை உள்ளடக்கியிருக்கிறது. மூன்று நண்பர்க..
₹276 ₹425
தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப் பெரிய கதை சொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதி நவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படு..
₹276 ₹290
சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். முழுநேர எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவ..
₹238 ₹250