Menu
Your Cart

வெள்ளங்கொண்ட அகரம்

வெள்ளங்கொண்ட அகரம்
-5 %
வெள்ளங்கொண்ட அகரம்
முத்துவேல் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புயலும், மழையும் சுழன்றடித்து, உப்பங்காற்று வீசி, எப்போதும் சொத சொதப்பும் ஈரமும் கொண்டு, உப்புதேலி நொதித்தும் புளித்துமிருக்கிற கடலோரத்து ஊர்களிலும், அந்தக் கடலோரத்திலேயே திணை மாற்றமாகக் கிடக்கும் குன்றுக் காடுகளிலும், புயல் காற்றுக்கேற்ப இயைந்து அல்லாட்டத்துடன் வாழ்ந்திடும் மனிதர்கள் முத்துவேலின் கதைகளெங்கும் விரவிக் கிடக்கிறார்கள். ஒருவருக்கு என்ன எழுதவேண்டும் என்று தெரிந்திருந்தால், எப்படி எழுத வேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. அவர் எழுதத் தொடங்குகின்ற போதிலேயே அது தன்னை உருவாக்கிக் கொள்ளும்! முத்துவேல் என்ன எழுத வேண்டும் என்று தெரிந்தவராக இருக்கிறார். அவரின் கதைகளில் மானுட அன்பும், மனித கரிசனையும், வாழ்க்கையின் அல்லல்களை பதிவு செய்வதன் ஊடே, அவற்றின் பின்னாலிருக்கும் அரசியலையும், சமூக அமைப்பையும், மனித இழிமைகளையும் விசாரிக்கின்ற கலைஞனுக்கேயுரிய கோபாவேசமும் துலக்கமாக இருக்கின்றன. மிகவும் தன்னியல்பாக வெளிப்படுகின்றன. - அழகிய பெரியவன்
Book Details
Book Title வெள்ளங்கொண்ட அகரம் (Vellangonda agaram)
Author முத்துவேல்
ISBN 9789392543401
Publisher தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் தொடங்கி மனிதகுல போராட்டமே வடிவமைக்கப்படுகிறது. கதை, கவிதை, நாவல் என முத்துவேலுக்கு அவனது வலுவான தோள்களில் இடியெனச் சரிந்த அவமானத்துக்குரிய, புறக்கணிக்கப்பட்ட, பசியுமான துயர் மிக்க வாழ்க்கையை எழுதவேண்டிய நிர்ப்பந்தம்.ரணப்பட்ட காயங்களில் கசியும் ரத்தக்கீறலாய் பதியப்பட்டிருக்..
₹95 ₹100
இலேசாகக் கவிச்சி நாற்றம் வீச, மெலிதாக இலை நரம்புகள் போல் ஓடும் ரத்த நாளங்களை வெளிக்காட்டியபடி முத்துவேலின் கவிதைகள் வாழ்க்கையை மிக வைராக்கியத்துடன் பேசுகின்றன..
₹67 ₹70