Menu
Your Cart

விசில்

விசில்
New -5 %
விசில்
நிவேதிதா லூயிஸ் (ஆசிரியர்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகம் முழுக்க பெண்ணியலாளர்கள் வலியுறுத்துவது Personal is Political. ஆனால், அப்படி 'அந்தரங்கத்தை அரசியலாக்குதல்', ஒளிவுமறைவின்றி நன்வரலாறு எழுதுதல் இன்றுவரை தமிழ்ப் பெண்களுக்கு வாய்க்கவில்லை. எனினும், தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நூல்களை இங்கு பெண்கள் எழுதி வந்துள்ளனர். இந்நூலும் அறே வகைமையே, இது எழுத்தாளரின் வாழ்க்கையினூடாகப் புனையப்பட்ட சிறு பின்னல் மட்டுமே. 'Whistle blower' என்று ஜூலியன் அசாஞ்சைக் கொண்டாடும் உலகம் இது. ஆனால், ஒரு விசில் புளோயராக, 'மெகா' ஊழல் ஒன்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த, தமிழ்நாட்டின் மூலையில் பணியாற்றிய பெண் ஒருவரை அதிகார மையம் எப்படி வாழ்க்கையின் ஓரத்துக்கே நெட்டித் தள்ளியது என்பதை விரிலின் 'இவன்' பேசுகிறாள். இன்றளவும் தொடரும் ஊழலை. அதை முறியடிக்க முடியாத கையறுநிலையை இந்த நூல் பேசுகிறது. கூடவே, இவள் மீட்டெடுத்த இவளின் வாழ்க்கையையும். நிவேதிதா லூயிஸ், எழுத்தாளர், சமூசு, பெண்ணிய ஆய்வாளர், வரலாற்றாளர், ஊடகவியலாளர். இணை நிறுவனர் ஹெர் ஸ்டோரிஸ், வரலாறு, தொல்லியல். இனவரைவியல், இனவரைவுத் தொல்லியல் உள்ளிட்ட தளங்களில் கடந்த ஆண்டுகளாக இயங்கிவருபவர். உள்ளூர். மழைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றை, பண்பாட்டை முனைப்புடன் மக்களிடம் கொண்டு செல்பவர். 2024-ம் ஆண்டு பெண்ணியச் செயல்பாட்டுக்கான தேசிய லாட்லி ஊடக விருதையும், 2021-ம் ஆண்டு லாட்லி பிராந்திய விருதையும் வென்றுள்ளார். இவரின் 'ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை' நால் சென்னை மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. இவரின் 'வடசென்னை வரலாறும் வாழ்வியலும் 2022-ம் ஆண்டு எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதையும் தமுஎகசவின் சிறந்த தொன்மைசார் நநூலுக்கான கே. முத்தையா விருதையும் பெற்றுள்ளது. முதல் பெண்கள், அறியப்படாத கிறிஸ்தவம். கலகப் புத்தகம், கிறிஸ்தவத்தில் ஜாதி. 1938 முதல் மொழிப்போரில் பெண்கள், பாதை அமைத்தவர்கள், பெயரற்றவர்களின் குரல் உள்ளிட்ட 14 நூல்களை எழுதியுள்ளார்.
Book Details
Book Title விசில் (Visil)
Author நிவேதிதா லூயிஸ்
ISBN 9788196876210
Publisher Her Stories Publication (ஹெர் ஸ்டோரிஸ்)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Feminism | பெண்ணியம், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha