Menu
Your Cart

பாலுமகேந்திரா: கலையும் வாழ்வும்

பாலுமகேந்திரா: கலையும் வாழ்வும்
-5 %
பாலுமகேந்திரா: கலையும் வாழ்வும்
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சினிமாவின் மீது பற்றும் ரசனையும் கொண்டவர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு கொடை. படமெடுத்தவரின் உள்ளிருந்து ஒலிக்கும் இதயத்துடிப்புடன் கூடிய தொனியோடு வெளியிலிருந்து அதே கரிசனத்தோடு இணையும் தேர்ந்த விமர்சகரின் குரல்தான் அதன் காரணம். ஒரு நீண்ட நேர்காணல் எனும் களப்பணியை மையமாக கொண்டு ஒரு மென்மையான அற்புதக்கலைஞனைப் பற்றிய தனி நூல் எழுதுவதெப்படி என்பதற்கு இந்நூல் ஒரு உன்னத உதாரணம். ஆழமான அலசல் கோரும் பொறுமைக்கும் நுண்ணிய அவதானிப்பு வேண்டி நிற்கும் பரந்துபட்ட வாசிப்புடன் கூடிய குவிமைய நோக்கிற்கும் இப்புத்தகம் நற்சான்று. யமுனாவினது எழுத்தின் ஆழ்மனதிலிருந்து பார்த்தோமேயானால் பாலு அவர்களின் கோகிலா, வீடு, மற்றும் யாத்ரா போன்ற படங்கள் அவரது பட்டியல்களையும் மீறி மேலே மிதந்து வருகின்றன. அத்தகைய ஒரு விஷயமே யமுனாவை சினிமாவைப் பற்றி நேர்காணல் மற்றும் கட்டுரைகள் சார்ந்து எழுதும்போதும் கூட ஒரு ஆழ்ந்த ரசிகனின் அகவயத்திலிருந்து விரியும் உணர்வெழுச்சியுடன் கூடிய செறிவுமிக்க அவதானிப்பாளராக, தற்சார்பற்ற ஆய்வாளராக முன்னிறுத்துகின்றது. மனித உறவின் சிக்கலை முன்னிலைப்படுத்தி யதார்த்த பாணியில் படமெடுத்த ஆர்ட் சினிமாவிற்கும் மைய நீரோட்ட சினிமாவிற்கும் நடுவில் ஒரு மிடில்ட்-ஆப்-த-ரோட் சினிமாவில் நம்பிக்கை கொண்ட இம்மூன்று இயக்குனர்களின் முக்கியமான படங்களும் பாலியல் சார்ந்த சிக்கல்கள் மூலமாக நமது சமூகத்தை அலசுகின்றன. அத்தகைய சிக்கலான உறவுகளை கவிநயத்துடன் தனது இயல்பான கேமராக் கண்களுடன் பார்ப்பதில் பாலு மகேந்திரா அவர்கள் நிகரற்று விளங்குகிறார். அவர் உலகலாவிய பல மேதைகளைப் போல தனது வாழ்விலிருந்தே தனது கவனிக்கதக்க படங்களுக்கான உந்துதலைப் பெற்றார். அவரது சீடர்கள் வரிசையில் இன்று பாலா, ராம், வெற்றிமாறன் மற்றும் சீனு ராமசாமி போன்றோர் பயணித்து வருவது மகிழ்ச்சி.
Book Details
Book Title பாலுமகேந்திரா: கலையும் வாழ்வும் (balumahendra-kalaiyum-vaazhvum)
Author யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
Publisher பேசாமொழி (pesamoli)
Pages 258
Year 2019
Edition 3
Format Paper Back
Category Cinema | சினிமா, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெ..
₹285 ₹300
பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்..
₹143 ₹150