Menu
Your Cart

யுகத்தின் முடிவில்

யுகத்தின் முடிவில்
-5 %
யுகத்தின் முடிவில்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘ஐராவதி கார்வே’ பெர்லின் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களை மானுடவியல் மற்றும் வரலாறு சார்ந்து விரிவாகவும் நுட்பமாகவும் ‘கார்வே’ மேற்கொண்ட ஆய்வு, மகாபாரதத்தைப் புரிந்துகொள்ள பெரிதும் வழிகாட்டுகிறது. ‘கார்வே' இந்தக் கட்டுரைகளை முதலில் மராத்தியில் எழுதினார். பின்பு பன்னாட்டு வாசகர்களுக்காக அவரே ஆங்கிலத்தில் இதனை மொழிபெயர்த்து வெளியிட்டார். ‘மகாபாரதம்’ ஆரம்பத்தில் ‘ஜெயா’ என்ற பெயரில்தான் அழைக்கபட்டிருக்கிறது. பல்வேறு காலகட்டங்களில் புத்துருவாக்கம் பெற்று, முடிவில் ‘மகாபாரதம்’ என்ற இதிகாசமாக மாறியது என்கிறார் ‘ஐராவதி கார்வே’. காந்தாரி, திரவுபதி, மாத்ரி, குந்தி போன்ற கதாபாத்திரங்களை ஆராயும்போது மகாபாரதக் காலத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்? அதன் பின்னுள்ள சமூகக் காரணிகள் எவை என்பதைக் குறித்து விரிவாக ஆராய்கிறார். பாண்டுவின் மனைவி என்ற முறையில் குந்தி உடன்கட்டை ஏறாமல், ஏன் மாத்ரி உடன்கட்டை ஏறுகிறாள் என்று ‘கார்வே’ முன்வைக்கும் கேள்வி மிக முக்கியமானது! விதுரனுக்கும் யுதிஷ்ட்ரனுக்குமான உறவானது தந்தை மகன் உறவு போன்றது என ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறார். அதற்குச் சான்றாக விதுரன் இறப்பதற்கு முன்பு, அவரைத் தேடி வரும் யுதிஷ்ட்ரனுடன் நடைபெற்ற உரையாடலின் வழியே இந்த உறவை உறுதி செய்கிறார். இதுபோலவே கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்குமான நட்பையும் இருவரது தோழமை உணர்வையும், காண்டவபிரஸ்தத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஒன்றுசேர்ந்து எப்படி தீக்கிரையாக்கினார்கள் என்பதையும் ஆராயும் ‘கார்வே’, பக்தி இயக்கம் தீவிரமாக வளரத் தொடங்கியபோது... இதிகாச பாத்திரங்கள் தெய்வாம்சம் பெற்ற கடவுளாக மாறினார்கள். அப்படித்தான் மகாபாரதப் பிரதியில் கிருஷ்ணரும் உருவாக்கப்பட்டார் என்று கூறுகிறார். இன்று ‘மகாபாரதம்’ குறித்த ஆர்வம் தீவிரமாகப் பரவி வரும் சூழலில், ‘மகாபாரத’க் கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ள ‘ஐராவதி கார்வே’ எழுதியுள்ள ‘யுகாந்தா’ ஒரு திறவு கோலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Book Details
Book Title யுகத்தின் முடிவில் (Yugaththin Mudivil)
Author இராவதி கர்வே (Iraavadhi Karve)
Translator இராக.விவேகானந்த கோபால் (Iraaka.Vivekaanandha Kopaal)
ISBN 9788126014466
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 272
Year 2002

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author