Menu
Your Cart

புதிய ஈரானிய சினிமா

புதிய ஈரானிய சினிமா
-5 %
புதிய ஈரானிய சினிமா
சஃபி (தொகுப்பாசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அகில உலக சினிமா இன்று ஈரானிய இயக்குனர்களின் தலைமையில் வழி நடத்தி செல்லப்படுகிறது. அன்று ஐரோப்பியர்கள் செய்துகாட்டியதைப் போல், சாதாரணமாக தெருவில் நடந்துபோகும் ஒரு குழந்தையை நோக்கி காமிராவை திருப்புவதின் மூலம், அவர்கள் இச்சாதனையை செய்துகாட்டியிருக்கின்றனர். ‘ஆப்பிள்’ படத்தை எடுத்த சமிரா மக்மல்பஃப், கான்ஸ் திரைப்பட விழாவில் தனது இரண்டாவது படத்திற்காக ஜுரி பரிசை வென்றபோது, ஈரானிய சினிமாவின் இளமைக்கு அங்கிருக்கும் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படும் யுக்திதான் காரணம் என்று சுட்டிக்காட்டினார். தனது பரிசை, ஜனநாயகத்திற்கும் ஒரு நல்ல வாழ்க்கைக்கும் போராடிவரும் நம்பிக்கையின் பிரதிபலிப்பான இளைய சமுதாயத்திற்கு’ அர்ப்பணித்தார். பல அராஜகங்களுக்கு நடுவே 1960களின் இறுதியில் தோன்றி, 1970களிலும் 1980களிலும் தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டு, 1990களில் உலக புகழ் பெற்ற ஈரானிய சினிமாவின் புதிய அலை திரைப்படங்களை பார்க்கும்போது, ஜனநாயகமில்லாத இடத்தில் எப்படி ஆழமான படைப்புகளை உருவாக்க முடிகிறது என்ற கேள்வி எழாமல் இருக்காது. அங்கிருப்பதைவிட ஓரளவுக்கு இந்தியாவில் ஜனநாயகம் இருந்தும் மாற்று சினிமா முயற்சிகள் இந்திய திரைப்பட அமைப்பில் வலிமை இழந்து வருவதற்கான காரணம் என்ன? ஈரானைவிட அதிக படங்களை எடுக்கும் தமிழ்நாட்டில் மாற்று சினிமா முயற்சிகள் ஒரு முழுமை பெறாமல் மடிந்து போனது ஏன்? இந்த பிரச்சனைகளுக்கு இங்கு உடனடியாக பதில் தேட வாய¢ப்பில்லை என்றாலும், ஈரானிய புதிய அலை திரைப்படங்களில் வரும் பயணங்களிலிருந்தும் அந்த பயணங்களால் உருவாகும் சந்திப்புகளில் இருந்தும், நாம் கற்றுகொள்ள வேண்டியவை ஆயிரமிருக்கின்றன என்ற வகையில், நமது சினிமாவில் இருக்கும் வெற்று இடங்களையாவது நாம் அறிய இந்த புத்தகம் உதவும். - வெங்கடேஷ் சக்ரவர்த்தி
Book Details
Book Title புதிய ஈரானிய சினிமா (puthiya iraniya cinema)
Compiler சஃபி (Zabi)
Publisher கருத்து=பட்டறை (Karuththu=Pattarai)
Pages 215
Year 2012
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

துன்யாஸாத் : ” இரவு பொழுதை இன்பமாக கழிப்பதற்கு உனக்கு தெரிந்த கதைகளில் ஒன்றை சொல்..” ஷராஸத் : ” ம். மிச்ச கதையை நான் சொல்லி முடிக்க வேண்டுமென்றால், என்னை மன்னர் நாளை உயிரோடு விட்டிருக்க வேண்டும்..”. பெண்கள் மேல் கடும் வெறுப்பு கொண்டு பூமியிலிருந்து ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழித்து கொண்டிருக்கும் மன்ன..
₹504 ₹530