Menu
Your Cart

இரும்புக்கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு

இரும்புக்கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு
-5 %
இரும்புக்கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகம் முழுக்க சுற்றியுள்ள இந்தியர் இவர். ஆனால், அவர் பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறவர் இல்லை. தான் சென்ற ஒவ்வோர் இடத்திலும் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர். மற்றவர்கள் சாத்தியமில்லை என்று சொன்ன விஷயங்களைச் செய்து காட்டியவர். குறிப்பாக, நஷ்டத்தைச் சந்திக்கும் நிறுவனங்கள் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் அவற்றை லாபத்தின்பக்கம் திருப்பிவிடுவார். ஆனால், இதைச் சொல்வது எளிது. செய்வது கடினம். சந்தேகமிருந்தால், லட்சுமி மிட்டலுடைய போட்டியாளர்களைக் கேட்டுப்பாருங்கள், அவரைக் காப்பியடித்து ஜெயித்துவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டவர்களை விசாரியுங்கள், அவர் எப்பேர்ப்பட்ட சாதனையாளர் என்பது புரியும். யார் இந்த லட்சுமி மிட்டல்? இந்தியாவில் பிறந்து, வளர்ந்த ஒருவர் உலகையே வளைத்துப்போட்டது எப்படி? மிகக் கடினமான இரும்புத் தொழிலில் அவர் வெற்றியடைந்தது எப்படி? நஷ்டம் தரும் நிறுவனங்களை லாபத்துக்குத் திருப்புவதற்கு அவர் பயன்படுத்திய உத்திகள் என்னென்ன? அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் எவை? இந்தப் புத்தகத்தைப் படியுங்கள், இந்த இரும்புக் கை மாயாவியுடைய வாழ்க்கையிலிருந்து நாமும் ஊக்கம் பெறலாம்!
Book Details
Book Title இரும்புக்கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு (IRUMBUKKAI MAAYAVI)
Author என்.சொக்கன் (N.Chokkan)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரி..
₹190 ₹200
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185