Menu
Your Cart

தோற்றவர் வரலாறு

தோற்றவர் வரலாறு
-5 %
தோற்றவர் வரலாறு
அ.முத்துலிங்கம் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தோற்றவர் வரலாறு

சில நாட்களுக்கு முன்னர் இயற்கையின் பேரதிசயம் ஒன்றைப் பார்த்த கதையை சு.ரா.விடம் கூறினேன். சு.ரா வசித்த வீட்டிலிருந்து அந்த இடம் சற்று தூரத்தில்தான் இருந்தது. பெயர் Ano nuevo அதாவது புதுவருட முனை. ஒவ்வொரு ஆண்டும், வருட ஆரம்பத்தில் அலாஸ்காவிலிருந்து 4000 மைல்கள் சளைக்காமல் நீந்தி ஆண்  சீல்கள் இந்த முனைக்கு வருகின்றன. அதே மாதிரி பெண் சீல்கள் எதிர்ப்பக்கமான ஹவாயி லிருந்து 3000 மைல்கள் நீந்தி வருகின்றன. அவை புது வருட முனையில் சந்தித்துக்கொள்கின்றன. அவற்றின் காதல் விளையாட்டு பிப்ரவரி 14 அன்று உச்சமடையும். அதில் இருந்துதான் காதலர் தினம் உண்டாகியது என்று சிலர் சொல்கிறார்கள். பெண் சீல்கள் குட்டிகளை ஈன்ற பின்னர் ஹவாய்க்கும் நீந்திப் போய்-விடும். ஆண் சீல்கள் அலாஸ்காவுக்குப் போகும். மறுபடியும் அடுத்த வருடம் அவை சந்திக்கும். இது பற்றியும் பேசினோம்.
புறப்படும்போது சு.ரா என் அனுபவத்தைக் கட்டுரை யாக எழுதச் சொன்னார். நான் அதுவரை கட்டுரை எழுதியது கிடையாது. அப்படித்தான் நான் முதன்முதல் கட்டுரை எழுதினேன். இப்பொழுது இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

- அ. முத்துலிங்கம்

Book Details
Book Title தோற்றவர் வரலாறு (thotravar varalaru)
Author அ.முத்துலிங்கம் (A.muthulingam)
ISBN 9789382648178
Publisher நற்றிணை (Natrinai)
Pages 0
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகெங்கும் பொதுவாகவுள்ள மனித உணர்வுகளைத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கதத்துடன் வெளிக்கொணரும் சிறுகதைகளை அடக்கியது இத்தொகுப்பு. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் ஆசிரியரின் கதை நிகழ்புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா,..
₹214 ₹225
முத்துலிங்கத்தின் படைப்புகள் நவீனத் தமிழிலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை. வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள் அவர் கதைகளில். ஆனால் தமிழ் வாசகனுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் முத்துலிங்கம் படைத்திருக்கிறார்...
₹209 ₹220
கொலுத்தாடு பிடிப்பேன்வாய்மொழி மரபின் தனித்தன்மைகளை,எழுத்து மரபின் வசீகரங்களுடன் பிணைத்துப் பயன்படுத்தும் முத்துலிங்கத்தின் மொழி,அவருடைய சிறுகதைகளுக்கென்று ஒரு தனித்த அழகையும் அதன் தொடர்ச்சியாகத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு புதிய சுவையையும் சேர்ப்பதாக அமைந்தது.பல்வேறு நிலப்பரப்புகள்,மாறுபட்ட பருவநிலைக..
₹570 ₹600
ஆட்டுப்பால் புட்டுஒரு பழுதடைந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு என்னைக் கொல்லப் போவதாக மிரட்டுகிறாய். என்னைக் கொல்வதால் உனக்கு என்ன பயன்? அடுத்த நாள் உன் ராணுவத்துக்கு வெற்றி கிட்டிவிடுமா? போரை நிறுத்திவிடுவார்களா? என்னைப்போல எத்தனை போராளிகள் இருக்-கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் நீ தேடித்தேடிக் கொல்..
₹95 ₹100