Menu
Your Cart

சங்க காலம்: தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு

சங்க காலம்: தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு
-5 %
சங்க காலம்: தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு
ப.சரவணன் (ஆசிரியர்)
₹314
₹330
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இனக்குழுக்களாகத் தோற்றம் பெற்ற தமிழினம் பண்பாடு, சமயம், பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பொருளாதாரம், நிர்வாகம் என்று பல தளங்களில் தம்மைச் செழுமைப்படுத்திக் கொண்ட காலகட்டம் சங்க காலம். வரலாற்றின் மிக அடிப்படையான, மிக முக்கியமான காலகட்டமாக இருந்தபோதிலும் சங்க காலம் பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளன. அவற்றிலும் அதீதப் புகழ் பாடும் பதிவுகளே அதிகம். இந்தப் புத்தகம் நடுநிலையுடன் சங்க காலத்தை ஆராய்ந்து தமிழர்களின் வாழ்க்கை முறையை மிகையின்றிப் பதிவு செய்கிறது. மன்னர்கள், புலவர்கள், கலைஞர்கள் ஆகியோரைப் பற்றி மட்டுமின்றி சாமானியர்களின் வாழ்க்கைமுறை, அவர்களுடைய உறவுகள், பண்டிகைகள், கலாசாரம், தொழில்கள், மத நம்பிக்கைகள் என்று ஒரு வண்ணமயமான சித்திரத்தையும் இந்தப் புத்தகம் வழங்குகிறது. சங்கத் தமிழர்கள் வந்தேறிகளா? தமிழ்மொழி தோன்றியது எப்போது? குமரிக்கண்டம் இருந்ததா? கடவுள் நம்பிக்கை எப்படித் தோன்றியிருக்கும்? தமிழர்கள் காதலை வரவேற்றவர்களா? சங்க காலத் தமிழர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்தனரா? என்பன உள்ளிட்ட பல கேள்விகளையும் எதிர்கொண்டு விவாதிக்கிறது. போர், அமைதி, காதல், கலை, அறம், பொருள், வணிகம் என்று சங்க காலத்தைத் தீர்மானித்த அனைத்து அம்சங்களையும் குறித்த எளிமையான வரலாற்றை சுவைபட அறிமுகப்படுத்தியுள்ளார் முனைவர் ப. சரவணன்.
Book Details
Book Title சங்க காலம்: தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு (Sanga Kaalam)
Author ப.சரவணன் (Pa.Saravanan)
ISBN 9789384149062
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 254
Published On Nov 2013
Year 2015
Edition 02
Category History | வரலாறு, தமிழர் வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சோறுபோட்டு ‘அகவல்’ பாடுவதையே வள்ளலாருக்குச் செய்யும் கைமாறாகக் கருதும் இந்த நாளிலும், ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்குத் தடையாக உள்ள எதையும் தயவு தாட்சண்யமின்றித் தூக்கியெறிந்து இந்தச் சமூகத்தைச் சீர்திருத்திய விஞ்ஞானி வள்ளலார் என்பதைப் புலப்படுத்த எழுதப்பட்டவையே இந்நூலிலுள்ள கட்டுரைகள். வள்ளலார் குறித்..
₹285 ₹300
எதைக் கேட்டால் எல்லா உலகங்களுக்கும் எலலாப் பாவங்களுக்கும் ஒழிந்து போகுமா அத்தகைய சிவபெருமானின் மிகச் சிறந்த ததுதுவத்தையும், தனித்துவ மகிமையையும், திருவுருச் சிறப்பையும் பற்றி இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார். மேலும் 49 உட்பொதிவுகளுடன் விளக்கிக் கூறி உள்ளார்...
₹166 ₹175
உ.வே. சாமிநாதையர் ‘ஆனந்த விகட’னில் தொடராக எழுதிய நூலாயிற்று. பலமுறை அச்சாகியுள்ள இந்நூலின் செம்பதிப்பு இது. இதழில் வெளியான தொடரின் மூல வடிவு, அதில் இடம்பெற்ற படங்கள், அரிய தேடலால் கிடைத்த புதிய படங்கள், ‘என் ஆசிரியப்பிரான்’ இணைப்பு, பொருளடைவு என இன்றைய வாசகருக்குப் பயன்படும் பல அம்சங்களை இப்பதிப்..
₹1,283 ₹1,350