Menu
Your Cart

குணங்குடியார் பாடற்கோவை

குணங்குடியார் பாடற்கோவை
-10 %
குணங்குடியார் பாடற்கோவை
₹198
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“போவோம் குணங்குடிக்கு எல்லோரும் புறப்படுங்கள் போவோம் குணங்குடிக்கு எல்லோரும்” பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு குரல் உரக்க ஒலித்தது; அழைத்தது. வேண்டியவருக்கு மட்டும் விடுத்த அழைப்பல்ல அது. அந்த அழைப்பு சாதிமத பேதமற்ற சமரச அழைப்பு; சகல மனிதர்களுக்கும் விடுத்த சகோதர அழைப்பு. ஏனென்றால் அந்தக் குரல் அழைத்த இடம், எல்லோர்க்கும் சொந்த இடம்; எல்லோரும் விட்டு வந்த இடம். அது மனிதனை மனிதன் சுரண்டிப் பிழைக்கும் பொருளாதார பூமியல்ல; சாதி சமயப் பகையால் சண்டையிட்டு மடியும் இருளாதார பூமியல்ல; அருளாதார பூமி. எல்லோரையும் ஆன்ம நேயத்தால் இணைக்கின்ற இலட்சியபுரி. குலம் பார்த்தல்ல, குணம் பார்த்துக் குடியுரிமை தரும் குணங்குடி. யார் அப்படி அழைத்தது? அவர்தாம் ஞானவள்ளல் குணங்குடி மஸ்தான் சாஹிப். இராமநாதபுரம் தொண்டிக்கு வடமேற்கிவல் பத்துக்கல் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கி.பி.1792 (ஹிஜ்ரி 1207) ஆம் ஆண்டு பிறந்தவர் மஸ்தான் சாஹிப். இதுவரை வெளிவந்த குணங்குடியார் பாடல் தொகுப்பு நூல்களில் அச்சுப் பிழைகள் மலிந்திருக்கின்றன. பல பிரதிகளை ஒப்பு நோக்கி இப்பதிப்பில் அப்பிழைகள் நீக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் கருத்து மயக்கமும். கருத்து முரணும் உள்ள வரிகள் எல்லாப் பிரதிகளிலும் அப்படியே இருநத்தால் அவற்றின் உண்மை வடிவம் ஊகிக்கப்பட்டுக் குறிப்புரையில் தரப்பட்டுள்ளது.
Book Details
Book Title குணங்குடியார் பாடற்கோவை (Kunangudiyar-Paadarkovai)
Author கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Apdhul Rakumaan)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2010
Edition 3
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஆலாபனை¸ பித்தன்¸ பால்வீதி¸ சுட்டுவிரல்¸ நேயர் விருப்பம்¸ சொந்தச் சிறைகள்¸ மின்மினிகளால் ஒரு கடிதம்¸ ரகசியப்பூ¸ பறவையின் பாதை¸ தேவகானம்¸ கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை ஆகிய 11 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 1 எனும் இந்நூல்...
₹675 ₹750
ஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு’ என்றுபிரார்த்தித்தேன்அவன் கண்ணீரைத் தந்தான்‘வரம் கேட்டேன்சாபம் கொடுத்து விட்டாயே’என்றேன்புத்தகத்திலிருந்து சில ..
₹90 ₹100
இந்நூலிற்கு கவிஞர் மீரா எழுதிய அணிந்துரையில் “ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் பு..
₹45 ₹50
1995 களில் “ஜூனியர் போஸ்டில்” வெளிவந்த 102 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 32 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இயல்பாக வளர்ந்த திறமை ஒன்று ஈடுசொல்ல முடியாத இலக்கியப் புலமை இரண்டு பறந்து தரை வெளியில் பாயும் ஆற்றுச் சிந்தனையை பனிமலையிலிருந்து வழிந்து விழும் அருவிச் சிந்தனையாக மாற்றிக் கொண்ட..
₹108 ₹120