Menu
Your Cart

அரசியலாகிற பண்பாடு

அரசியலாகிற பண்பாடு
-5 %
அரசியலாகிற பண்பாடு
கிறிஸ்டோபர் காட்வெல் (ஆசிரியர்), கமலாலயன் (தமிழில்)
₹437
₹460
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1935 ல் கிறிஸ்டோபர் காட்வெல் "மாயையும் உண்மையும்" (Illusion and Reality) என்ற தனது முதல் நூலை எழுதி மாக்மில்லன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.உடனடியாக அடுத்து வந்த ஆண்டுகளில் "அழிந்துவரும் பண்பாடு பற்றிய ஆய்வுகள்"(Studies on a Decaying Culture), "இயற்பியலில் நெருக்கடி"(Crisis in Physics) போன்ற நூல்களையும் எழுதினார். அவர் எழுதிக் குவித்தவற்றை உடனடியாக வெளியிட இயலவில்லை.இதற்கிடையில் ஸ்பானிய நாட்டில் பாசிச நெருக்கடி உருவாயிற்று.பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து பாசிச எதிர்ப்புப் போராளிகள் ஸ்பானிய நாட்டுக்கு விரைந்தனர்.காட்வெல்லும் பிரிட்டிஷ் கட்சியின் பிரதிநிதியாக ஆயுதமேந்தி ஸ்பெயினுக்குச் சென்றார்.போர்க்களத்தில் அவர் அதிக காலம் போராட முடியவில்லை 1937 ல் அப்போது அவருக்கு 29 வயது,அவர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இறந்த அவரது உடலைக்கூட தோழர்களால் மீட்டெடுக்க முடியவில்லை. அவரது எழுத்துகள் மார்க்சிய சிந்தனையில் கற்றுத் தேறியவையாக உள்ளன என்பதைக் கண்டறிந்த கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்கள்,அவரது இழப்பு எவ்வளவு பெரியது என்பதை அப்போதுதான் உணர்ந்தனர். அவரது நூல்களை ஒழுங்கமைத்து வெளியிடும் முயற்சியில் பிரிட்டிஷ் மார்க்சியர்கள் ஈடுபட்டனர். இன்றுவரை சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட அவரது நூல்கள் பல்வேறு பதிப்புகளில் வெளிவந்துள்ளன.
Book Details
Book Title அரசியலாகிற பண்பாடு (Arasiyalaagira Panpaadu)
Author கிறிஸ்டோபர் காட்வெல் (Kiristopar Kaatvel)
Translator கமலாலயன் (Kamalalayan)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 0
Year 2021
Category Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, மார்க்சியம், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

(இந்த) ருசிகரமான கோர்வையான புத்தகம் சினிமாவின் குறீயீடுகளையும் சமிக்ஞைகளையும் அதன் தயாரிப்பையும் வரவேற்பையும் வசீகரமாக அலசுகிறது. - பரத்வாஜ் ரங்கன் திரை அகத்தின் பல தனித்துவங்களில் முக்கியமானது பாண்டியனின் பிரதானக் குறிக்கோளான எழுத்து,கட்டமைப்பு,இயக்கத்திலுள்ள ஆக்கபூர்வ தருணங்களின் பதிவு.தனிப்பட்ட க..
₹523 ₹550
ஆதிக்க சக்திகளின் வெறியாட்டத்தால் பாந்த் சிங் இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழந்தவர்.இவரது மகளைக் கூட்டு வல்லுறவு செய்தவர்களை எதிர்த்துப் போராடி குற்றவாளிகளுக்குச் சிறைத்தண்டனை பெற்றுத் தந்தார் பாந்த் சிங்.இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சக்திகள் அவரது கைகால்களை வெட்டிப் போட்டார்கள்...
₹228 ₹240