- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788199411180
- Page: 216
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: ஆதி பதிப்பகம்
கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு யாப்பருங்கலக்காரிகையைக் கற்பிக்க ஆரம்பித்தபோது, மாணவர்கள் காரிகை நூலின் அமைப்பினைக் கண்டு அச்சமுற்றனர். எனவே, எளிய குறிப்புகளுடனும் அட்டவணைகளுடனும் அவர்களுக்குக் கற்பித்தேன். எளிதாகப் புரிந்துகொண்டனர். யாப்பருங்கலக்காரிகையை எளிய வடிவில் தரவேண்டும் என்ற எண்ணமே இருபத்தியோராம் நூற்றாண்டு மாணவர்களுக்கு ஏற்றவகையில் இந்நூலை வடிவமைக்க வழிவகை செய்தது. காரிகை விளக்கம், உதாரணங்கள், உதாரண நினைப்புக் காரிகைகள், உரைச் சூத்திரக் காரிகைகள் ஆகியவற்றைத் தெளிவாக எளிமையாக இந்நூல் வழிதர முயன்றுள்ளேன். இந்நூலில் வெண்பா வகைகள், வெண்பா இனங்கள், நால்வகை பாக்கள் ஆகியவை ஒப்பீடு செய்து அட்டவணை தரப்பட்டுள்ளன. கலிப்பா வகைகள் எவ்வாறு வேறுபடுத்தப்பட்டுள்ளன என்பதையும் இந்நூல்வழி தெளிவுபடுத்தியுள்ளேன். எளிய முறையில் யாப்பிலக்கணம் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்நூல் நிச்சயம் உதவும் என்பது என் நம்பிக்கை. -ச.முத்துச்செல்வி |
| Book Details | |
| Book Title | எளிய வடிவில் யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும் (Eliya Vativil Yaapparungkalakkaarikai Moolamum Uraiyum) |
| Author | ச.முத்துச்செல்வி (Cha.Muththuchchelvi) |
| ISBN | 9788199411180 |
| Publisher | ஆதி பதிப்பகம் (Aadhi Publication) |
| Pages | 216 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Grammer | இலக்கணம் |