Menu
Your Cart

சொல்லகராதி

சொல்லகராதி
சொல்லகராதி
₹330
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒட்டு உறவு ஒட்டு -குருதிக் கலப்பு நெருக்கம் உடையவர் ஒட்டு. அவரவர் உற்றார். உறவு -கொண்டும் கொடுத்தும் உறவு ஆயவர், உறவு. தாய் தந்தை உடன் பிறந்தார் மக்கள் என்பார் ஒட்டு ஆவர். கொண்டு கொடுத்த வகையால் நெருக்கமாவார் உறவு ஆவர். இனி 'உற்றார் உறவு' என்பதில் உற்றார் எனப்படுவார் ஒட்டு என்க. 'கேளும் கிளையும்' என்பதிலும், கேள் என்பது ஒட்டையும், கிளை என்பது உறவையும் குறிக்கும். ஒரு வேரில் இருந்து நீர் பெறும் மரம் செடிகள் 'ஒட்டு' எனப்பெறல் அறிக. ஒட்டார் - பகைவர் எனப்படுவார். 'உற்றார் உறவு' காண்க. திண்டு - வஞ்சம் திண்டு என்பது தலையணை, திண்ணை போன்றதைக் குறிக்கும். 'திண்டு தலையணை' என்பதில் திண்டு மெத்தையைக் குறிக்கும். திண்ணையில் சாய்ந்துகொள்வதற்காகத் திண்டு அமைப்பதும் வழக்கு. திண்டுக்கு முண்டு என்பதில் எதிரிடைப் பொருள் தரும். ஆனால் இத்திண்டு வேறுபட்டது. "அவன் மனத்தில் ஒரு திண்டு இருக்கிறது. அதனால் கலகலப்பாகப் பேசுகிறானா பாருங்கள்" என்பதில் திண்டு என்பதற்கு வஞ்சம் அல்லது கரவு என்னும் பொருளுண்மை வெளிப்படும். கல்லக்காரம் அக்காரம் இனிப்பு: அக்கார அடிசில் என்பது கற்கண்டுச் சோறு. கல்லக்காரம் எனப் பனங்கற்கண்டை வழங்குதல் யாழ்ப்பாண வழக்காகும்.
Book Details
Book Title சொல்லகராதி (Sollakarathi)
Author இரா.இளங்குமரனார்
ISBN 9788198369482
Publisher தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam)
Pages 620
Year 2025
Edition 1
Format Paper Back
Category Dictionary & Encyclopedia | அகராதி & களஞ்சியம், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha