Menu
Your Cart

கங்கையில் இருந்து கூவம் வரை

கங்கையில் இருந்து கூவம் வரை
-5 %
கங்கையில் இருந்து கூவம் வரை
யுவ கிருஷ்ணா (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அடையாறு, கூவம் போன்ற அழகிய நதிகளைச் சாக்கடைகளாக்கி வேடிக்கை பார்த்தது சென்னை. வடிகால்களை எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரப்பி, குப்பைத்தொட்டிகள் ஆக்கினார்கள் மக்கள். பொங்கிய பெருவெள்ளத்தில் நகரமே தவித்ததை வேடிக்கை பார்த்தன நதிகள். குப்பைகளோடு சேற்றையும் கொண்டு வந்து வீடுகளுக்குள் போட்டுச் சென்றது மழைநீர். இயற்கையைச் சிதைக்காமல் வாழ வேண்டிய அவசியத்தை இதைவிட மோசமாக யாரும் கற்றுக்கொள்ள முடியாது. நவீன வாழ்க்கை முறை ஏகப்பட்ட குப்பைகளை இந்த பூமியில் சேர்ப்பதாக இருக்கிறது. பிளாஸ்டிக் குப்பை முதல் எலெக்ட்ரானிக் குப்பை வரை குற்ற உணர்வே இல்லாமல் வீதிகளில் வீசுகிறார்கள் பலரும்! இந்த பூமியின் நுரையீரலில் குப்பைகளை அடைப்பது, புகை பிடிப்பதைவிட மோசமான புற்றுநோயைத் தரும். அதன் வலி தாங்காமல் மனித இனமே தவிக்க நேரும். குப்பை என்பது ஏதோ மாநகராட்சி, நகராட்சி என உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்னை அல்ல! எந்த வகையிலும் சூழலை மாசுபடுத்தாத வாழ்க்கை வாழ வேண்டியது இப்போதைய தேவை என உணர்த்தும் நூல் இது. நம் சந்ததிகளுக்கு அழகிய உலகத்தை உருவாக்கிக் கொடுக்க நினைக்கும் ஒவ்வொருவரும் இதைப் படிக்க வேண்டும்! ‘தினகரன்’ வசந்தம் இணைப்பிதழில் தொடராக வெளிவந்து, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்று, இப்போது நூல் வடிவில் வெளிவருகிறது.
Book Details
Book Title கங்கையில் இருந்து கூவம் வரை (Gangaiyil Irunthu Cooum Varai)
Author யுவ கிருஷ்ணா (Yuva Krishna)
ISBN 9789385118517
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 0
Year 2016
Category History | வரலாறு, தமிழர் வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால் வசீகரித்து வரும் யுவகிருஷ்ணாவின் அழிக்க பிறந்தவன் திருட்டு விசிடியை மைய்யமாக கொண்ட விறு விறு கதை. ‘படுவேகமான த்ரில்லர் வகையறா’ நாவல் என சக எழுத்தாளர்கள் சான்று கொடுத்துள்ளனர். பர்மாபஜாரைப் பற்றியும் அங்கு நிகழும் சட்ட்திற்க்கு புரம்பான செயல்கள் நிழல் வியாபா..
₹95 ₹100
கதை கேட்காத மனிதர்களும் இல்லை. கதை சொல்லாத நாவுகளும் இல்லை. பிரபஞ்சமே கதைகளால் ஆனதுதான். கதைகளால் நிரம்பியதுதான். முக்கியமான விஷயம், இப்படி கதை சொல்வதில் பெண்கள் கெட்டிக்காரர்கள் என்பதுதான். தங்கள் குழந்தைகளுக்கு, பேரன் & பேத்திகளுக்கு கதை சொல்வதற்கென்றே பிறந்தவர்கள் போல்தான் பெண்கள் வாழ்கிறார்கள். ..
₹143 ₹150
இந்தியத் திருமணங்கள் அதிலும் குறிப்பாகத் தமிழகத் திருமணங்கள் ஏராளமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கொணடது. அது எல்லாவ்ற்றிற்கும் முக்கியமான காரணங்களை முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். கல்யாண வீடுகளில் தங்களைச் சுற்றி நடக்கும் இந்தச் சடங்குகளின் அர்த்தம் தெரியாமல்தான் மணமக்கள் அமர்ந்திருக்கின்றன..
₹181 ₹190