

-5 %


காந்தியின் தன்வரலாறு -சத்திய சோதனையின் ஆய்வுப் பதிப்பு
Categories:
India History | இந்திய வரலாறு
₹941
₹990
- Edition: 1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'சத்திய சோதனை' எனப் பரவலாக அறியப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தன்வரலாறு தமிழுக்குப் புதிதல்ல. இதுவரை ஐந்து மொழியாக்கங்கள் இந்நூலுக்கு வந்துள்ளன. 'சத்திய சோதனை'யின் ஆய்வுப் பதிப்பான இந்த நூலை உருவாக்கியவர் திரிதிப் சுஹ்ருத். காந்திய அறிஞர்.
சத்திய சோதனை நூலிலுள்ள பல்வேறு நிகழ்வுகள் குறித்த கூடுதல் தகவல்கள், அவற்றின் பின்னணி சார்ந்த குறிப்புகள், குஜராத்தி மூலத்திற்கும் ஆங்கில மொழியாக்கத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் கொண்ட விரிவான பதிப்பு இது. குஜராத்தியில் காந்தி எழுதியதை, காந்தியின் மேற்பார்வையில் செய்யப்பட்ட ஆங்கில மொழியாக்கத்துடன் ஒப்பிட்டு நோக்குகிறது என்ற வகையில் இந்த நூல் தனித்துவமானது. முக்கியத்துவம் வாய்ந்தது. காந்திக்கு வந்த கடிதங்களையும் தேவையான இடங்களில் அடிக்குறிப்பில் அளித்திருக்கிறார் திரிதிப் சுஹ்ருத்.
காந்தியின் தன்வரலாற்றுக்குத் தனித்த இலக்கிய மதிப்பும் இடமும் உண்டு. காந்தியை அவரது மனப் போராட்டங்களுடன் நமக்கு நெருக்கமாக அது அறிமுகப்படுத்துகிறது.
Book Details | |
Book Title | காந்தியின் தன்வரலாறு -சத்திய சோதனையின் ஆய்வுப் பதிப்பு (Ganthiyinthanvaralarusathiyasothanaiyinaaivupathippu) |
Author | மகாதேவ் தேசாய் |
Translator | சுனில் கிருஷ்ணன் (Sunil Kirushnan) |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Edition | 1 |
Format | Paper Back |
Category | India History | இந்திய வரலாறு |