Menu
Your Cart

இரவுக்கு முன்பு வருவது மாலை

இரவுக்கு முன்பு வருவது மாலை
-5 % Out Of Stock
இரவுக்கு முன்பு வருவது மாலை
ஆதவன் (ஆசிரியர்)
₹261
₹275
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சராசரி மனிதர்களின் உளவியல் சார்ந்த பிரச்னைகளை ஆதவனைக் காட்டிலும் நேர்த்தியாகக் கையாண்டவர்கள் கிடையாது. வாழ்வின் ருசிகரமான, உணர்ச்சிகள் ததும்பி வழியும் கணங்களை அறிவின் தளத்தில் பரிசீலித்து, அதே சமயம் பயமுறுத்தல்கள் இல்லாமல் வெளிப்படுத்துவதில் அவர் சமர்த்தர். ஆதவன் நூல் வரிசையில் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் முதல் நூல் இது. அறுபதுகளில் எழுதத் தொடங்கிய ஆதவனின் முதல் நூலும் இதுவே. வேறெந்தத் தொகுப்புகளிலும் இடம்பெறாத அவரது பெண், தோழி, தலைவி என்னும் குறுநாவலுடன் சேர்த்து மொத்தம் ஆறு குறுநாவல்கள் இதில் உள்ளன.அபூர்வமும் அருமையுமாய் நாம் நினைப்பவை அதிக நாள் நீடிப்பதில்லை என்பது ஒரு சோகமயமான யதார்த்தம். இலக்கியத்திலும் அப்படித்தான். பாரதியும், புதுமைப்பித்தனும் மிக அபூர்வமான மேதைகள். அவர்கள் 50 வயதுக்குள் மறைந்து விட்ட மாதிரி நம் தலைமுறையின் அபூர்வ படைப்பாளியான ஆதவனும் 45 வது வயதில் அகால மரணமுற்றது தமிழ் இலக்கிய உலகின் ஈடு செய்ய முடியாத இழப்பு. 1965 வாக்கில் 'தீபம்', 'கணையாழி'யில் எழுதத் தொடங்கிய அவர் மிகக் குறுகிய காலத்தில் தனித்தன்மை கொண்ட சாதனைகளை தமிழ்ப் படைப்புலகில் நிகழ்த்தி தனக்கென ஒரு அழியாத இடத்தை வாசகர் நெஞ்சில் பிடித்துக்கொண்டவர்.
Book Details
Book Title இரவுக்கு முன்பு வருவது மாலை (Iravukku Munbu Varuvadhu Maalai)
Author ஆதவன் (Aathavan)
ISBN 9788183680196
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 304
Published On Nov 2003
Year 2004

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள்..
₹418 ₹440
காகித மலர்கள்..
₹295 ₹310
என் பெயர் ராமசேஷன்ஒரு நகர்ப்புற மத்திய தர இளைஞனின் கண்களின் வழியே நவீன வாழ்நிலையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்தரிக்கப்படும் என் பெயர் ராமசேஷன் ஆதவனின் புகழ் பெற்ற நாவல். சுய நிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணம் மிகுந்த சித்திரம் இந்தநாவல்...
₹152 ₹160
நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைக்களங்கள் மத்தியதர வர்க்க மனிதர்களே அவரது கதை மாந்தர்கள் இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சனத்துடனும் அதே சமயம் பரிவுடனும் வெளிப்படுத்துபவை அவரது கதைகள் உண்மைகளுக்கும் மறைக்கப்படும் போலித்தனங்களுக்கும் பொய்மைகளுக்கும்..
₹238 ₹250