Menu
Your Cart

நிலைத்த பொருளாதாரம்

நிலைத்த பொருளாதாரம்
-5 %
நிலைத்த பொருளாதாரம்
ஜே.சி.குமரப்பா (ஆசிரியர்)
₹190
₹200
  • Edition: 2
  • Year: 2016
  • Page: 160
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publication Date: January 1, 2016
  • Publisher: இயல்வாகை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நிலைத்த பொருளாதாரம் - ஜே.சி. குமரப்பா

இந்தப் பொருளாதாரக்கொள்கையைத் தன்னுடைய அல்லது காந்தியுடைய மூளையிலிருந்து தனித்துவமாக உதித்த புத்தம்புதுக் கொள்கை என எந்த இடத்திலும் ஜே.சி. குமரப்பா உரிமை கொண்டாடவில்லை.மனித அறிவின் பரப்பு எல்லைக்குட்பட்டதுதான். மனித வாழ்வைவிடப் பெரியதான இயற்கையிலிருந்து தொடங்கி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் கடவுளுடன் கொண்டு இணைப்பதன் வாயிலாக அவர் செய்ததெல்லாம் பொருளாதாரத்தை அதன் இயல்பான வடிவில் மீட்டுருவாக்கம் செய்ததுதான் என ஆன்ம பணிதல் செய்கின்றார் குமரப்பா.குருவி, மலை, நாணல் செடி, பழம், ஆறு போன்ற இயற்கையின் பல்வேறு வெளிப்பாடுகள் தங்களுடைய இயல்பான அன்றாடச் செயல்பாடுகளின் வழியாகவே இயற்கையின் மற்ற அனைத்துக் கூறுகளுடனும் எவ்வித நெருக்குதலும் இல்லாமல் ஒத்திசைகின்றன. ஒன்று மற்றதை வாழ்ந்து செழிக்க வைக்கின்றன.இயற்கையின் மற்றெல்லா உயிரற்ற உயிருள்ள அசையும் அசையாப் படைப்புகளுக்கும் இது பொருந்தும். முரண்களும் மோதல்களும் நீக்கப்பட்ட அன்பும் அமைதியும் ததும்பும் சூழலில் இயற்கையின் உள்வெளி லயத்துடன் பொருளாதாரத்தைக் கச்சிதமாகக் கொண்டு பொருத்தி அதற்கு நிலைத்த தன்மை என்ற அமரத் தன்மையைப் பெற்றுக் கொடுக்கின்றது இந்த நூல்.இந்த நூலை மொழியாக்கிய அ.கி. வேங்கட சுப்ரமணியனின் நடை சிறப்பாக உள்ளது. நூலின் எழுத்துரு, பத்தியமைப்பு, வெளி அட்டை வடிவமைப்பு, உள் ஓவியங்கள், தரமான அச்சுத்தாள் என அனைத்திலும் செய்நேர்த்தி மிளிர்கின்றது.


Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நமக்குள்ளான வன்முறையின் வெளிப்பாடே போர். நமக்குள் குவித்து வைக்கப்படும் வெறுப்பு பகைமை வளர்ந்து பெருகிப் போராக வெளிப்படுகிறது. நமக்குள் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் வளர்க்காமல் புற உலகில் சமாதானத்தை உருவாக்குவது எளிதல்ல நமக்குள் அமைதியை வளைப்பதன் மூலமே உலகில் சமாதானத்தை வளர்க்க முடியும்...
₹114 ₹120
இந்த புத்தகத்தை நாம ஏன் வாசிக்கணும்? இது யாரை பத்துன புத்தகம்?நம்ம ஊர்ப் பக்கம் வைராக்கியம் அப்பிடின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க,அதுக்கு ஒட்டு மொத்த எடுத்துகாட்டா இருக்கும் ஜே.சி.குமரப்பா.நம்ம பக்கத்துல இருக்கிறதோட அருமை நாம மறந்து போயிட்டோம்,உண்மையாவும் சத்தியமாவும் வாழ்ந்து காமிச்ச குமரப்பா பத்தி ..
₹95 ₹100
குமரப்பாவின் காலத்தில் முதலாளியம் சமத்துவத்தை உறுதி செய்வது குறித்துப் பேசிய பொதுவுடமை ஆகிய இரண்டு பெரும் பொருளியல் சிந்தனைப் பள்ளிகள் விளங்கின. ஆனால் இவையிரண்டும் "பொருள் ஆக்க முறை" பற்றிக் கவலை கொள்ளவில்லை...
₹95 ₹100