Menu
Your Cart

ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு

ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு
-5 %
ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை, மொழியை அடையும் விந்தையைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். குழந்தையின் சிந்தனையின் அமைப்பு நரம்புக் கட்டமைப்பாக அதன் மூளைக்கும் ஏற்கனவே உள்ளது. புற உலகம் அதற்குச் சொற்களையும் படிமங்களையும் மட்டுமே அளிக்கிறது. ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள், கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான். இந்தச் சிறிய நூல் என் மகள் ஜெ. சைதன்யா பற்றிய தொடர்ந்த அவதானிப்புகளால் ஆனது. என் தணியாத பாசத்தால் ஈரமானது. என் கனவுகளால் ஒளியூட்டப்பட்டது. குழந்தை மனம் மெய்ஞானத்தைத் தொடும் சில கணங்கள் இதில் இருப்பதால் இது ஒரு பேரிலக்கியம். ~ எழுத்தாளர் ஜெயமோகன் தன் மகளின் குழந்தைமையை அருகிருந்து அவதானித்த ஒரு படைப்பாளித் தந்தையின் அனுபவ உரையாடல்களின் தொகுப்பாக, ‘ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு’ என்னும் நூல் தன்னறம் வாயிலாக மீள்பதிப்பு அடைகிறது. “தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும்போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது. கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மானுடஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதை குழந்தை மொழியைக் கற்றுக்கொள்ளும்போது உணரலாம்” என்னும் நித்ய சைதன்ய யதி அவர்களின் வார்த்தைகள் சுமந்துள்ள ஆழுள்ளத்தை, எழுத்தின்வழி அறியச்செய்கிற ஒரு வழிகாட்டிநூலாக இப்புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் மழலைஞானத்தின் வேர்களைப்பற்றி விவரிக்கிறது.
Book Details
Book Title ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு (j-chaithanyaavin-sindhanai-marabu)
Author ஜெயமோகன் (Jeyamohan)
Publisher தன்னறம் நூல்வெளி (Thannaram Publications)
Published On Jun 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்...
₹147 ₹155
இன்றைய காந்தி(கட்டுரைகள்) - ஜெயமோகன் :காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு ப..
₹504 ₹530
அனல் காற்றுஅனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச் சென்று அதன் உச்சத்தில் சட்டென்று மழை வந்துவிடுகிறது என்பதே, வாழ்க்கையில் அனல்காற்று வீசும் பருவம் ஒன்றை தாண்டிவராதவர்கள் யார்? அந்த உச்சகட்ட இறுக்கம் கொண்ட சில நாட்களின் கதை இது. எதிர்த்திசை நோக்கி முறுக்கிக்கொள்ளும் உறவுகள், தீமழை கொட..
₹171 ₹180
தனிக்குரல்பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல. ஆகவே என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாக கட்டுரை வடிவில் எழுதப்-பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அதை என..
₹219 ₹230