Menu
Your Cart

கடன்: தீதும் நன்றும் - அள்ள அள்ளப் பணம் (பாகம் - 9)

கடன்: தீதும் நன்றும் - அள்ள அள்ளப் பணம் (பாகம் - 9)
-10 %
கடன்: தீதும் நன்றும் - அள்ள அள்ளப் பணம் (பாகம் - 9)
சோம.வள்ளியப்பன் (ஆசிரியர்)
₹225
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் புது வரவு. கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம் பார்த்துவிடும். செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது ‘அள்ள அள்ளப் பணம்’ தொடர் நூல் வரிசைமூலம் தொடர்ந்து பதிவு செய்துவரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம. வள்ளியப்பன் எழுதியுள்ள இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன். கடன் என்பது பெரிய சப்ஜெக்ட். அடமான கடன், செக்குகள், பிராமிசரி நோட், செக் பவுன்ஸ், வங்கி கடன்கள், NBFC நிறுவனங்களில் இருந்து கடன்கள், லோன் ஆப்கள், வியாபாரக் கடன், தங்கத்தின் மீதான கடன், விவசாய கடன், வாகன, வீட்டுக் கடன் அதற்குரிய வரி விலக்குகள், கடனை திருப்பி தராவிட்டால் எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகள், சர்பாசி சட்டம் என பலவற்றைப் பற்றியும் ஒரு எளிமையான, அதே சமயம் விரிவான புத்தகம். கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள் குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ‘அள்ள அள்ளப்பணம்’ வரிசையில் முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் மிகுந்த கவனம் பெறும் என்பது உறுதி. Other Books from this series: 1. பங்குச்சந்தை அடிப்படைகள் 2. பங்குச்சந்தை அனாலிசிஸ் 3. ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் 4. போர்ட்ஃபோலியோ முதலீடுகள் 5. பங்குச்சந்தை டிரேடிங் கிழக்கு 6. மியூச்சுவல் ஃபண்ட் 7. தங்கம், வெள்ளி, பிட்காயின் 8. இன்சூரன்ஸ்
Book Details
Book Title கடன்: தீதும் நன்றும் - அள்ள அள்ளப் பணம் (பாகம் - 9) (Kadan: Alla Alla Panam (part - 9))
Author சோம.வள்ளியப்பன் (Soma Valliappan)
ISBN 9789390958412
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 224
Published On Sep 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புள்ளவை; நம் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவை. அதனால்தான் நிர்வாகவியல் வகுப்புகளில் கம்யூனிகேஷனை ஒரு முக்கியப் பாடமாகப் ப..
₹113 ₹125
நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்கு..
₹122 ₹135
உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களின் மூட்டை. நீங்கள் நம்பமுடியாத பல திறமைகள் அதற்கு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நடத்திக் காட்டும் அற்புத ஆற்றல் உங்..
₹180 ₹200
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும். அதற்கு முதலில் தேவை, கமிட்மெண்ட். எடுத்துக்கொண்ட வேலையை வெற்ற..
₹117 ₹130