Menu
Your Cart

கண் தெரியாத இசைஞன்...

கண் தெரியாத இசைஞன்...
-5 % Out Of Stock
கண் தெரியாத இசைஞன்...
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பிறப்பிலேயே கண்தெரியாத அவனது சூழலின் அனைத்து திசைகளிலிருந்தும் பெருக்கெடுத்து வந்து அவனின் காதுகளை நிறைக்கும் ஓசைத் திரள்களினூட்டே மிதந்து வந்தது அந்த குழலிசை…
கற்றறியாத நாட்டுப்புறத்தான் ஒருவனின் சுய துயரத்திலிருந்து, அவனது ஆன்மாவின் தாகமாய், நாணல்தட்டை முகிழ்த்த  தூய இசை…

மாலை வேளைகளில் அச்சிறுவனுக்குள் நிரம்பித் ததும்பும் அந்தப் பிசிரற்ற  லயம் அவனை இசையின் திசையில் செலுத்துகிறது. அவனின் அம்மா, கண்தெரியாத அந்தச் சிறுவனுக்கு, நிறங்களையும் ஒளிகளையும் பியானோவில் இசைத்து உணர்வின் அலைகளாக்கித் தருகிறாள்.

ஏரிநீர் சிற்றலையோசை, கிளைகளை அளையும் காற்றோசை, விடியல் பறவைகளின் சப்தம், பண்ணை விவசாயிகளின் குரல்கள்…

இவற்றுடன் அவனது அழுகை, ஆற்றாமை, நேசம், கடுமை, பயம் யாவற்றையும்-பியானோவில் தத்தும் அவன் விரல்கள் இசைகளாக்குகின்றன.

இசையாகும் அவனது மகிழ்வும் துயரமும் இருளுக்குள் மலரும் நிறங்களாகிச் சொரிகின்றன.

Book Details
Book Title கண் தெரியாத இசைஞன்... (kantheriyatha isainan)
Author விளாதீமிர் கொரலேன்கோ (Vladimir Korolenko)
Publisher நல்லநிலம் (nallanilam)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிறவிக் குருடனான அவன் உலகத்தை உணர்வதற்கு இயற்கை ஏராளமான வாசல்களைத் திறந்தது. அவன் குழந்தையாக வளரும்பொழுதே, அத்தகையதொரு உணர்வின் வாசல் வழியாக இது அம்மா, இது மாமா, இது பழகியவர், இது புதியவர் என்பதை அவர்களது முகத்தின் மீதாகப் படர்ந்து நகரும் அவனது பிஞ்சு விரல்களே கண்கள் போலமைந்து அவர்களை அறிய உதவியது. ..
₹190 ₹200