Menu
Your Cart

சவாலே சமாளி

சவாலே சமாளி
-5 % Out Of Stock
சவாலே சமாளி
S.L.V.மூர்த்தி (ஆசிரியர்)
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எத்தனை உயரம் ஏறினாலும் ஒரு சிறு சறுக்கல் நம்மை அடியோடு கீழே சாய்த்துவிடுகிறது. நமக்குத் தேவையெல்லாம் சவால்களை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் திறன். பாம்புகளை ஏணிகளாக மாற்றும் சாகசக் கலை. நெருக்கடிகளை எதிர்த்து நிற்கும் தில். தயாரா? யானை என்ன யானை? டைனோசருக்குக்கூட அடி சறுக்கியிருக்கிறது. சறுக்கியதால்தான் அந்த இனமே ஒட்டுமொத்தமாக அழிந்தொழிந்தது. அறிவியல் உணர்த்தும் அதி முக்கிய உண்மை இது. நெருக்கடிகளைச் சமாளிக்கத் தெரியாவிட்டால் காணாமல் போய்விடுவோம். எனக்கு மட்டும் ஏன் இத்தனைச் சிக்கல்கள்? என்னை மட்டும் ஏன் எல்லோரும் குறிவைத்துத் தாக்குகிறார்கள்? ஏன் என்னை கைவிடுகிறார்கள்? ஏதாவதொரு நெருக்கடியில் அடுத்த முறை சிக்கிக்கொள்ளும்போது தயவு செய்து இப்படி வருந்தாதீர்கள். காரணம், பிரபஞ்சம் தோன்றிய காலம் தொடங்கி அனைத்து ஜீவராசிகளும் நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றன. இப்படி ஆகிவிட்டதே என்று முடங்கிவிடுவதால் பலனில்லை. தீர்வை நோக்கி நகரும் உயிரினங்களால் மட்டுமே நீண்ட காலத்துக்கு ஜிவித்திருக்க முடியும். எல்லோருக்கும் பொதுவான உண்மை இது. யோசித்துப்பாருங்கள். ஓர் அலுவலகத்தில் உயர் பதவியை அடையவிரும்பினாலும் சரி, குடும்ப வாழ்வு உன்னதமாக இருக்கவேண்டுமனாலும் சரி, லட்சியங்கள் நிறைவேற வேண்டுமானாலும் சரி. பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியம். தனி நபர்கள் என்றில்லை. மாபெரும் நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும், விஞ்ஞானிகளும், ஏன் அரசாங்கங்களுமே கூட பெரும் நெருக்கடிகளைக் கடந்தே வந்துள்ளன. சுவிட்சைப் போட்டால் லைட் எரிவது போல் எதையாவது செய்து நம் வாழ்க்கையை பிரகாசமாக்கிக்கொள்ள முடியுமா? முடியும் என்று அழுத்தம்திருத்தமாக, ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறது இந்நூல். சுவாரஸ்யமான நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள். கார்ப்பரேட் பாடங்கள். பெரும் நிறுவனங்களின் வெற்றி ஃபார்முலாக்கள். பயனுள்ள டிப்ஸ். அத்தனையும், அத்தனையும் உள்ளே.
Book Details
Book Title சவாலே சமாளி (Savale Samaali)
Author S.L.V.மூர்த்தி (S.L.V.Murthy)
ISBN 9788183684583
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Published On

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மினுமினுப்பும் பளபளப்புமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது பி.பி.ஓ. துறை. டாக்டர், என்ஜினியர், கலெக்டர் வரிசையில் இன்று அதிகம் பேரை ஈர்த்துக்கொண்டிருக்கும் துறையும் இதுவே. நினைத்து பார்த்திருப்போமா? எடுத்த எடுப்பில் எகிற வைக்கும் சம்பளம். அறுசுவை உணவு. அருந்த வேளாவேளைக்குப் பழச்சாறு. ஒன்ஸ்மோர் போகலாமா ந..
₹71 ₹75
சிறுவியாபாரிகள் முதல் பெருவியாபாரிகள்வரை வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் மக்களோ வால்-மார்ட்டின் திறப்பு விழாவுக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். சிறிய மீனுக்குக் குறி வைத்து பெரிய திமிங்கிலத்தையே வளைத்துப் பிடித்தவர் சாம் வால்ட்டன். அவர் வால்மார்ட் ஸ்டோரை ஆரம்பித்த..
₹95 ₹100
எதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலமாகக் கனவு கண்டால் எப்படி இருக்கும்? மாதச் சம்பளம். வருடாந்திர சம்பள உயர்வு. சொந்த வீடு. ஒரு கார். இவை சராசரிக் கனவுகள். அட்டகாசமாக ஒரு ப..
₹171 ₹180
ஒரு நாட்டின் வரலாறு தனி மனிதர்களின் முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாகத் திகழும் அதிசயம் வரலாற்றில் அபூர்வம். இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு, குறிப்பாக இளைஞர்-களுக்கு ஜப்பான் ஒரு முன்மாதிரியாக இருந்து வந்திருக்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? நூற்றாண்டுகால மன்னராட்சியின்கீழ் ஜப்பான் இருந்த ந..
₹143 ₹150