Menu
Your Cart

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்
-5 %
ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்
மருதன் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்து தமிழ் திசையின் இணைப்பிதழான மாயா பஜாரில் 'இடம் பொருள் மனிதர் விலங்கு' என்னும் தலைப்பில் நான் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, வாழ்க்கை, அறிவியல், கதை, உயிரினங்கள் என்று இளம் வாசகர்களுக்கு ஒரு வண்ணமயமான உலகை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றாலும் இந்தத் தொடருக்குக் கிடைத்துவரும் வரவேற்பு நம்பமுடியாததாக இருக்கிறது. ஒவ்வொரு புதனன்றும் கட்டுரை வெளிவந்த சில மணி நேரங்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து, குறிப்பாக மாணவர்களிடமிருந்து உற்சாகமான மின்னஞ்சல் கடிதங்கள் வர ஆரம்பித்துவிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் சி. மகேந்திரன் என்று தொடங்கி பலரும் இந்தக் கட்டுரைகள் குறித்து உரையாடினர், ஊக்குவித்தனர். பல நண்பர்கள் வாரம் தவறாமல் அழைத்து அன்றைய கட்டுரை குறித்து விவாதித்தனர், ஆலோசனைகள் அளித்தனர். இதையெல்லாம் சாத்தியப்படுத்தியவர் மாயா பஜார் பொறுப்பாசிரியர் சுஜாதா. இடம் பொருள் மனிதர் விலங்கு நூலாக்கம் பெறும் இத்தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். - மருதன்
Book Details
Book Title ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் (Sherlock Holmes Theerkka Mudiyaatha Puthir)
Author மருதன் (Marudhan)
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 184
Year 2019
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டிய தாகவும் களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவு ம் குற்றம் சும..
₹181 ₹190
திபெத்தை ஒரு தனி நாடாகத்தான் நமது வரைபடங்கள் காட்டும். ஆனால் இன்றுவரை சீனா இதனைத் தன்னில் ஒரு பகுதியாகத்தான் அறிவித்து மேலாதிக்கம் செய்துவருகிறது. தமக்கென ஒரு திட்டவட்டமான வரலாறு இல்லாத காரணத்தாலேயே சரித்திரத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் திபெத் மக்கள். திபெத்துக்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவிக்கும் அமெரிக்..
₹204 ₹215
உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களிடம் கடற்படை உண்டு. விமானப்படைகூட உண்டு. உறுதியான தலைமை, ஒழுக்கம் மிகுந்த படையாளிகள், குறைந்த தளவாடங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படு..
₹214 ₹225
சோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ,கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம். ரஷ்யா என்றால் ஜார். ஜார் என்றால் ரஷ்யா.ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது.அடித்த..
₹190 ₹200