Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரைக்கதை

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரைக்கதை
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரைக்கதை
மிஷ்கின் (ஆசிரியர்)
₹600
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழ் சினிமா 2013 : கவனம் ஈர்த்த படைப்புகள்

தலைமுறைகள் : தலைமுறைகள் தாண்டி

மூத்த கலைஞர்களுள் ஒருவரான பாலுமகேந்திரா பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கிய தலைமுறைகள் பல விதங்களிலும் ஆறுதல் அளிக்கிறது. தமிழ் வாசனையோ கிராமிய மணமோ அற்ற ஒரு தலைமுறைக்கும் அவை இரண்டையும் தன் மூச்சுக் காற்றாகக் கொண்ட ஒரு தலைமுறைக்கும் இடையே நடக்கும் சந்திப்பின் சலனங்கள் என்று இதன் கதையை வரையறுக்கலாம். கிராமக் கலாச்சாரத்தின் சத்தான அம்சங்களோடு சாதி உணர்வு என்னும் களையும் நவீனத்துவத்திற்கு முகம்கொடுக்காத ஒவ்வாமையும் இருப்பதையும் இப்படம் பதிவுசெய்கிறது. நகர வாழ்வையும் நவீனத்துவக் கூறுகளையும் விமர்சிக்கும் இந்தப் படம் அவற்றை வில்லனாகச் சித்தரிக்காமல் இருப்பது ஆறுதலளிக்கிறது. தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே உருவாகும் அன்பு மொழி, வயது, கலாச்சாரம் ஆகியவற்றைத் தாண்டிய உறவையும் மாற்றங்களையும் சாத்தியப்படுத்துவது நெகிழவைக்கிறது.

அழகான காட்சிப் படிமங்கள், மனதை வருடும் இசைக்கோலங்கள், நேர்த்தியான நடிப்பு, சமூகம், மொழி ஆகியவை குறித்த அக்கறை ஆகியவை இந்தப் படத்தின் வலுவான அம்சங்கள். நகரம் - கிராமம், தமிழ் - ஆங்கிலம், போன்ற எதிர் நிலைகளின் சந்திப்பில் உருவாகும் முரண்களும் அவற்றின் விளைவுகளும் திரைக்கதையாக விரிகின்றன. இயல்பும் ரசனையும் மிகுந்த காட்சிகள் படத்தைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக்குகின்றன. மனிதர்களின் மாற்றங்களைச் சித்தரிக்கும் காட்சிகள் மிகையானவையாகத் தெரிகின்றன. எதிர்நிலைகளிடையே உருவாகும் முரண்பாடுகளின் ஊடாட்டத்தை மேலும் வலுவாகச் சித்தரித்திருக்கலாம்.

ஒரு கனவைத் திரக்கதையாக்கிய விதத்திலும் அந்தத் திரைகக்தையைப் படமாக்கிய விதத்திலும் பாலுமகேந்திராவுக்கு வெற்றி. முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கும் அவரது நடிப்பும் பாராட்டத்தக்க விதத்தில் உள்ளது. முரண்பாடுகளைக் கையாளும் விதத்தில் பழைய பாலுமகேந்திராவின் படைப்பூக்கம் வெளிப்பட்டிருந்தால் இது மிக முக்கியமான படமாக இருந்திருக்கும். - அரவிந்தன்

தங்க மீன்கள் : வாழ்க்கைச் சித்திரம்

தமிழ் சினிமாவில் திடீரெனப் பிரபலமடைந்துவிட்ட பிளாக் காமெடிப் படங்களுக்கு நடுவே ராமின் இயக்கத்தில் வெளிவந்து கவனம் பெற்ற படம் தங்க மீன்கள். குழந்தைகள் படமாகவும், அரசுப் பள்ளிகளின் சிறப்பைப் பிரச்சாரம் செய்வதாகவும் மேலோட்டமாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் இப்படம் இவற்றையெல்லாம் தாண்டிய ஓர் அசலான வாழ்க்கைச் சித்திரத்தைப் பதிவுசெய்கிறது.

இளம் வயதிலேயே காதல் திருமணம் செய்துகொண்ட கல்யாணி, அவனுக்காக வீட்டைவிட்டு ஓடிவந்து குடும்பம் நடத்தும் வடிவு. நாகர்கோயில் புற நகரில் ஒரு மேட்டு நிலத்தில் அமைந்துள்ள அவர்கள் வீடு. அங்கு ஓய்வுபெற்ற ஆசிரியரான கல்யாணியின் தந்தையுடனும் தாயுடனுமான அவர்கள் வாழ்க்கை. இந்த நால்வருக்கும் இடையிலான உறவின் மையம் குழந்தை செல்லம்மா. மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கலையும் பாசாங்குகளையும் சின்னச் சின்ன உரையாடல்களில், பாவனைகளில் உணர்த்துகிறது இப்படம். ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் தன் மகளுக்கான கல்விக் கட்டணமான 2 ஆயிரம் ரூபாய் செலுத்த சிரமப்படுகிறான் கல்யாணி. ஆனால் அவன் தந்தை சொந்தமாகக் கார் வைத்திருக்கிறார். ஒரே வீட்டுக்குள் இரு வேறு விதமான வாழ்க்கை. படத்தில் வரும் மனிதர்கள் இயல்பான பலவீனங்களுடன் இருக்கிறார்கள். சொற்ப வருமானத்துக்குள் காதல், கனவுகள், சுயமரியாதை என்பவற்றுக்குள் வாழும் சாமான்ய மனிதர்களின் உருவமாக வருகிறான் கல்யாணி. கல்யாணி பாத்திர விவரிப்பும் அதை ராம் 

Book Details
Book Title ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரைக்கதை (Onaum attukutium)
Author மிஷ்கின் (Myskin)
Publisher பேசாமொழி (pesamoli)
Pages 500
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிசாசு- திரைக்கதை:மிக எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பிசாசு திரைப்படம் மிஷ்கினின் மிகச்சிறந்த கவிதை. ஒரு Mysterious ஆன Thriller கதையில் எப்படி சிறந்த கவிதையைக் கொண்டுவர முடியும்? கண்டிப்பாக முடியுமென்று தன் சக Technician களின் மூலம் நிரூபித்திருக்கிறார். முன்னெப்போதும் கேட்டிராத புத்தம் புதிய இசையை A..
₹300
யுத்தம் செய் திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.ஒரு திரைப்படம் பலமுறை பிறக்கிறது.முதலில் எண்ணம் திரைக்கதையாக காகிதத்தாள்களில் பிறக்கிறது.அடுத்த பிறவி,படப்பிடிப்புத் தளத்தில்.பின்னர் படத்தொகுப்பு அறையில்,இறுதியில் படக்கலவை,ஒலிக்கலவை,வண்ணநே..
₹300
அஞ்சாதே திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.இப்படத்தைப் பற்றிய சில கருத்துகள்:மிஷ்கினின் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய தனித்துவமான குரலை நாம் கேட்கலாம்.இப்புத்தகத்தில் அவரது தனித்துவமான எழுத்தை நீங்கள் வாசிக்கலாம்.                      ..
₹300
நந்தலாலா திரைக்கதைஎன்னைப்போல் உங்களுக்கும் மிஷ்கினின் ‘நந்தலாலா’ பிடித்திருந்தால் அதன் திரைக்கதையைப் படிக்க நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.                                                                                                      -மணிரத்னம்மெதுவாக நகரும் படம் ‘நந்தலாலா’. நுணுக்கங்களை அறி..
₹300