Menu
Your Cart

ஒன்று

ஒன்று
-5 %
ஒன்று
ரா கண்ணன் (ஆசிரியர்), ராஜு முருகன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த விரல்களில் ஒட்டியிருக்கும் வண்ணத்தைப் போன்றது. நீண்ட நெடிய வாழ்வின் நீளம் முழுக்க அந்த வண்ணம் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட பல வண்ணங்களின் கலவைதான் இந்தப் புத்தகம். கண்ணதாசனின் வரிகளைப் பிள்ளையார்சுழியாகக் கையாண்டு ஆரம்பிக்கப்பட்டதாலோ என்னவோ... இந்தக் கதைகள் கடல் கடலாய்க் காதலை விரித்துப்போட்டு அழகு காட்டுகின்றன. ஜாலியும் கேலியுமாய் சரவெடி கொளுத்திய வித்தியாச எழுத்துநடைதான், இந்தக் கதைகளின் ஹைலைட். ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் நாமும் நம் சம்பந்தப்பட்ட சம்பவமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது. சமூகப் புழக்கங்களில் முழுக்க நனைந்தவர்களாக இன்றைய இளைய தலைமுறையின் நரம்புகளுக்குள் ஊடுருவி உள்மனம் அறிந்தவர்களாக ரா.கண்ணன், ராஜுமுருகன் இருவரும் காதலைத் திகட்டத் திகட்ட பந்தி வைத்திருக்கிறார்கள். மொட்டை மாடி, ஒயின் ஷாப், மருத்துவமனை, தெருமுனை என நாம் உலவிவந்த சகல இடங்களிலும் ஒளித்துவைத்துப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைப்போல் இந்தக் கதைகள் சொல்லும் சேதிகள் அத்தனையும் நமக்கே நமக்கேயானது. உயிருக்குயிராகப் பழகிய நண்பர்கள், ஒரு மலையாளி நர்ஸுக்குக்காக பேசிக்கொள்ளாமல் ரணமாகிக் கிடந்தது முதல் காதலில் தோற்றவன் ரவுடியாக உருமாறி நின்றதுவரை இந்தப் புத்தகத்தைப் புரட்டப் புரட்ட நீங்கள் சம்பந்தப்பட்ட நினைவுகள் வந்துகொண்டே இருக்கும். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே இந்தத் தனித்துவ எழுத்துக்களுக்குக் கிடைத்த வரவேற்பு எக்கச்சக்கம்.
Book Details
Book Title ஒன்று (Ondru)
Author ரா கண்ணன், ராஜு முருகன்
ISBN 9788184764659
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 135
Published On Nov 2012
Year 2012
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வட்டியும் முதலும் வ் - ராஜூ முருகன்:பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, ..
₹451 ₹475
உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும் என்றார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதியும், எழுத்தாளருமான லியோனார்ட் உல்ஃப். வேலை அ..
₹238 ₹250