-4 %
Out Of Stock
தீ பரவட்டும் – “ஏ தாழ்ந்த தமிழகமே!”
அறிஞர் அண்ணா (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 13
- Year: 2009
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பூம்புகார் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூல் 09.02.1943 இல் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில், பார்ப்பன வேதமதமான இந்து மதத்திற்கு வலுசேர்க்கும் இராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களை ஏன் தீயிட்டு கொளுத்த வேண்டும்? என்ற பொருளில் ‘தீ பரவட்டும்’ நடந்த சொற்போரின் தொகுப்பே இந்நூல். கூட்டத்திற்கு இந்துமத பரிபாலன நிலையத் தலைவர் தோழர் சி.என்.இராமசந்திரன் செட்டியார், பி.ஏ.பி.எல். அவர்கள் தலைமை வகித்தார். தோழர் அண்ணா அவர்கள் தலைமையில், தோழர் ஈழத் தடிகளும் எதிர்த்தரப்பில் தோழர்கள் ஆர்.பி.சேதுப் பிள்ளை பி.ஏ.பி.எல்., அவர்களும் சீனிவாசன் அவர்களும் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள்.
இதன் இரண்டாம் கட்டச் சொற்போர் 14.03.48 மாலை 6 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்கப் பாடசாலை மண்டபத்தில், பெரும் திரளான பொதுமக்கள் முன்னிலையில் நடை பெற்றது. கம்பராமாயணமும், பெரியபுராணமும் ஒழிக்கப்படவேண்டும் என்று திராவிடநாடு ஆசிரியர் தோழர் சி.என்.அண்ணாதுரை பேசினார். ஒழிக்கவேண்டாம் என்பது பற்றிப் பேராசிரியர் தோழர் எஸ்.சோமசுந்தர பாரதியார் சொற்பொழி வாற்றினார். சேலம் கல்லூரித் தலைமைப் பேராசிரியர் தோழர் ஏ.இராமசாமி அவர்கள் தலைமை வகித்தார்.
இவ்விரண்டு சொற்பொழிவுகளும் ஒன்றாக ‘தீ பரவட்டும்’ என்ற தலைப்பில் 1996 நவம்பர் மாதம் (முதற்பதிப்பு) திராவிடர் கழக வெளியீடாக வெளியானது. ‘இவர்தான் அண்ணா…!’ என்ற தலைப்பில் தோழர் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் எழுதிய முன்னுரையோடு வெளி வந்துள்ளது.
| Book Details | |
| Book Title | தீ பரவட்டும் – “ஏ தாழ்ந்த தமிழகமே!” (thee-paravattum-yei-thazhutha-tamilagame) |
| Author | அறிஞர் அண்ணா (Arignar Annaa) |
| Publisher | பூம்புகார் பதிப்பகம் (Poombukar Pathipagam) |
| Year | 2009 |
| Edition | 13 |
| Format | Paper Back |
| Category | திராவிட அரசியல், பகுத்தறிவு, Essay | கட்டுரை |