Menu
Your Cart

உறுதி மட்டுமே வேண்டும்

உறுதி மட்டுமே வேண்டும்
-7 %
உறுதி மட்டுமே வேண்டும்
சோம.வள்ளியப்பன் (ஆசிரியர்)
₹112
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும். அதற்கு முதலில் தேவை, கமிட்மெண்ட். எடுத்துக்கொண்ட வேலையை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கும்வரை ஓயமாட்டேன் என்னும் கர்மசிரத்தை. எந்த சஞ்சலத்துக்கும் சலசலப்புக்கும் இடம் கொடுக்காத மனக்கட்டுப்பாடு. வேறு வழியே இல்லை. ஒரு தவமாக எடுத்துக்கொண்டு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இலக்கை நிர்ணயித்துக்கொண்டால் மட்டுமே வெற்றி கிடைத்துவிடாது. மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு அதை நோக்கி நாம் பயணம் செய்தாகவேண்டும். அர்ஜுனனின் கண்களுக்குப் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. மரமோ அதன் கிளைகளோ அல்ல. உறுதி மட்டுமே வேண்டும். செய்துமுடிப்பேன் என்னும் மனஉறுதி. அந்த உறுதியை நீங்கள் பெறுவதற்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துசக்தி. உங்கள் கனவுகளை விரிவாக்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான சூட்சுமங்களையும் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.
Book Details
Book Title உறுதி மட்டுமே வேண்டும் (Urudhi Mattume Vendum)
Author சோம.வள்ளியப்பன் (Soma Valliappan)
ISBN 9788183687850
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 120
Published On Nov 2007
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புள்ளவை; நம் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவை. அதனால்தான் நிர்வாகவியல் வகுப்புகளில் கம்யூனிகேஷனை ஒரு முக்கியப் பாடமாகப் ப..
₹102 ₹110
உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களின் மூட்டை. நீங்கள் நம்பமுடியாத பல திறமைகள் அதற்கு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நடத்திக் காட்டும் அற்புத ஆற்றல் உங்..
₹195 ₹210
நீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒர..
₹149 ₹160
சோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் பேசும் மொழி புரிய ஆரம்பித்தது..
₹186 ₹200