Menu
Your Cart

உயிர்ப்புதையல்

உயிர்ப்புதையல்
-5 % Out Of Stock
உயிர்ப்புதையல்
கோவை சதாசிவம் (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், கானுயிர் ஆர்வலர் என பன்முகத் தளங்களில் அறியப்பட்ட கோவை சதாசிவத்தின் சூழலியலைப் பற்றிய எளிமையான நேரடியான புத்தகமிது. மலைத் தொடர்களைக் காணும் ஒரு கவிமனதின் துடிப்புகளாக 22 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், நதிகள், கடற்கரைகள் என இயற்கையின் கூறுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அறிய வேண்டிய அரிய தகவல்களுடன் இயற்கையைத் தாயாகவும் காடுகளைக் குல சாமியாகவும் உளமார நம்புகிற உணர்வுப் பூர்வமான ஒரு மனதின் வெளிப்பாடாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. ‘வள்ளுவனும், வள்ளலாரும், பாரதியும், இராகுல்ஜியும், ஏங்கல்சும் சூழலியல் உணர்வோடு தான் வாழ்ந்தார்கள் படைத்தார்கள்’ என்பது நமக்கு உறைக்கும் விதத்தில் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது, எளிமையும் கவித்துவமும் ஒன்றுகூடிய மொழியில் வாசகரை உடனே தன்னோடு அணைத்து அழைத்துச் செல்லும் நடையில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளது இந்நூலின் தனிச்சிறப்பாகும். நாளெல்லாம் இயற்கையைச் சீண்டிக்கொண்டிருக்கும் மனிதனை வலுவான வார்த்தைகளால், வாதங்களால், குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது இந்தப் புதையல்.
Book Details
Book Title உயிர்ப்புதையல் (uyirputhaiyal)
Author கோவை சதாசிவம் (Kovai Sadhasivam)
Publisher குறிஞ்சி பதிப்பகம் (Kurinji Pathippagam)
Pages 144
Year 2016
Edition 1
Format Paper Back
Category Wild Life | காட்டுயிர், Ecology | சூழலியல், Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு மழை இரவில் சேற்றில் உறங்கும் தவளைகள் விழித்துக் கொண்டன் இயற்கையை பாடலாய் இசைக்கும் அதன் குரலோடு மனிதர்கள் உரையாட வேண்டும் வாங்க, தவளையோடு பேசலாம்…!..
₹29 ₹30
யானைகளை இயற்கையின் ஒரு பகுதியாகத்தான் நமது முன்னோர்கள் கருதினார்கள். மனிதன் எல்லா உயிர்களோடும் வாழ்வதுதான் முழுமையான வாழ்வு என்பதை அறமாகக் கொண்டிருந்தார்கள். குறிஞ்சி நிலத்தைக் காட்டுயிர்களின் வாழ்விடமாக விட்டு வைத்திருந்தார்கள். குறிஞ்சியும், முல்லையும் திரிந்தால் பாலையாகும் என்ற அறிவியல் பார்வை அவ..
₹57 ₹60
பல்லி ஓர் அறிவியல் பார்வைகட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை! வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால்! அறிவு நம்பிக்கையிலிருந்து தொடங்குவதில்லை! சந்தேகிப்பதிலிருந்து தொடங்குகிறது! அறிவின் உயரத்தை சுருக்கியதில் நம்பிக்கைகளுக்கு நிறைய பங்குண்..
₹29 ₹30
பூவுலகில் பொதி சுமப்பதாக ஓர் உயிரினம பிறக்குமா…? கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா…? கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா…? முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட…. வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்…? குடும்பத்தில், பனிமலையில், அரசியலில் கழுதையின் தலையை உருட்டுவது ஏன்…? கேள..
₹24 ₹25