Menu
Your Cart

வேள்வி

வேள்வி
வேள்வி
சவுக்கு சங்கர் (ஆசிரியர்)
Categories: நாவல்
₹ 350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுங்கள்; அநீதியைக் கண்டால் தட்டிக் கேளுங்கள்; உண்மையைவிட வலிமையான ஆயுதம் வேறில்லை; உலகமே எதிர்த்தாலும் துணிந்து நில்லுங்கள். இப்படியெல்லாம் சொல்லிப் பார்த்துக்கொள்ளும்போது உத்வேகம் ஏற்படுவது உண்மைதான். ஆனால் இந்த உத்வேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிஜமாகவே போராட ஆரம்பிக்கும்போது கனவு கலைந்துபோகிறது. யதார்த்தம் முகத்தில் வந்து அறைகிறது. உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டோமே என்று மனம் படபடக்கிறது. உண்மையை, நீதியை, தர்மத்தை, துணிவை உயர்ந்த விழுமியங்களாக உயர்த்திப் பிடிப்பவர்களைக் கண்டு சலிப்பும் எரிச்சலும் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இது ஒரு சாமானியனின் கதை. விழுமியங்கள் மீது வலுவான நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவனின் கதை. உண்மையை ஓர் ஆயுதமாகத் தரித்துக்கொண்டு அதிகாரத்தை எதிர்க்கத் துணிந்த ஒருவனின் கதை. நீதியும் நியாயமும் கற்பிதங்கள் அல்ல, மனிதர்களை மனிதர்களாக வைத்திருக்க அவை அவசியம்; உயிரைக் கொடுத்தேனும் அவற்றைக் காக்கவேண்டும் என்று துடிக்கும் ஓர் இளைஞனின் கதை. இது போராட்டத்தின் கதை. முடிவில்லாமல் நீண்டுசெல்லும் ஒரு வேள்வியின் கதை.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

உளவு - ஊழல் - அரசியல் - (சவுக்கு சங்கர்) : நான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால் இருக்கமுடியவில்லை. நான் பணிசெய்யும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலேயே பல்வேறு ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. சமூக நலன் சார்ந்து சிந்திக்கவேண..
₹ 200
1. அமைப்பாய்த் திரள்வோம்:இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர்.திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மிளவும் மீறாமல் அந்த விதிப்படி வினையாற்றும் வித்..
₹ 725
இந்தியாவில் எதற்குப் பஞ்சம் உண்டோ இல்லையோ ஊழலுக்கு மட்டும் பஞ்சமே ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட இதில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்றே சொல்லமுடியும். சுதந்தர இந்தியாவின் வரலாறு என்பது ஒரு வகையில் ஊழல்களின் வரலாறும்தான். மாநில அளவிலும் சரி, மத்தியிலும் சரி; ஆட்சியாளர்களின் வரிசை என்பது அவர்கள் மேற்கெ..
₹ 200
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.