Menu
Your Cart

We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders.  Thank you for your understanding!

வேர்ப்பற்று

வேர்ப்பற்று
-5 %
வேர்ப்பற்று
We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of upto 1 week in processing and shipping of orders. Thank you for your understanding.!
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எப்போதும் இ.பா.வின் நாவல்களில் சமூகம் கண்முன்பு அசைந்தாடும். இவர் தொடுக்கும் கதாபாத்திரங்கள் செயற்கை இழைகளால் நெய்யப்படுவன அல்ல. நம்மிலிருக்கும் யதார்த்தங்களை வைத்தே அழகான ஒரு பூமாலையைத் தொடுப்பார். 1946-ல் தொடங்கும் இக்கதை 1952-ல் முடிகின்றது. சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் நடக்கும் கதையெனினும் இது சொல்வது ஓர் இளைஞனுக்குள் நடக்கும் அழுத்தமான மனப்போராட்டங்களை மட்டுமே. சாதிகளற்ற சமுதாயமே அவனது கனவு உலகம். ஆனால் இறுதிவரையில் அவனது கனவு, கனவாகவே இருந்துவிடுகிறது. 'ஆயிரம் உண்டிங்கு சாதி' என்று கூறிய பாரதியின் சொற்கள் அன்றும் இன்றும் நடைமுறையாயிருப்பதை அவன் காண நேரிட்டிருந்தால், காலனை காலுக்கருகே அழைக்காமல் தன்னை அழைத்துச்செல்ல கைகூப்பி வேண்டியிருப்பான்' என்கிறார் இ.பா. தனது முன்னுரையில். கணையாழியில் தொடராக வெளிவந்த இந்நாவல், இ.பா.வின் சிறந்த படைப்புகளுள் ஒன்று. The society always sways before our eyes in the novels of Indira Parthasarathy. His characters are real life characters. The story starts in 1946 and ends in 1952. Set in the period of Indian Independence, it presents the strong psychological struggles of a young man who dreamt of a society devoid of caste. This novel is one of his highly acclaimed works which appeared as a serial in Kanaiyazhi.
Book Details
Book Title வேர்ப்பற்று (Verpatru)
Author இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
ISBN 9788183681520
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 288
Published On Nov 2005
Year 2006

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுதந்தர பூமியை வெறும் அரசியல் நாவல் என்று வகைப்படுத்திவிட முடியாது. இந்நாவல் முன்வைக்கும் கவலைகளும், கேள்விகளும் சுதந்தரம் அடைந்த நாளாக நம்முடன் தொடர்ந்து வருபவை. 1973-ல் இந்நாவல் முதல்முதலாக வெளியானபோது மிகுந்த கவனத்தையும், சர்ச்சைகளையும் சம்பாதித்தது. அந்த சர்ச்சைகள் இப்போதுகூட உயிருடந்தான் இருக்க..
₹204 ₹215
ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைதான் இ.பா. இந்நாவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நாவல் மட்டுமே. ஆனால் யாரும் இதனை மேலோட..
₹171 ₹180
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று கேட்டால் இல்லை. ஆனால் இதில் காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த போர்வையும் அணியாமல் மிக இயல்பாக ஒரு பட்டாம்..
₹90 ₹95
இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’, மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. கிருஷ்ணர் என்கிற கடவுள் அல்லது கதாநாயகன் அல்லது படிமத்தை நாம் நீருடன் ஒப்பிடலாம். எந்தப் பாத்திரத்துடனும் பொருந்திப் போகக் கூடியது. தவிரவும் எக்காலத்துக்குமான பிரதிநிதியாகக் கிருஷ்ணரை வைத்துப் பேசவும் வி..
₹171 ₹180