Menu
Your Cart

அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்
-5 %
அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்
மிகெய்ல் நைமி (ஆசிரியர்), கவிஞர் புவியரசு (தமிழில்)
₹138
₹145
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
லெபனான் நாட்டு அறிஞரான மிகெய்ல் நைமி ஒருநாள் ஒரு காப்பிக் கடைக்குள் மழைக்காக ஒதுங்கியபோது, அந்தக் கடையின் உரிமையாளர், அங்கு பணியிலிருந்து காணாமல் போய்விட்ட ஒரு அம்மை வடுமுகத்து இளைஞனைப் பற்றி நைமியியிடம் புலம்பியதோடு அந்த இளைஞன் எழுதி வைத்திருந்த நினைவுக் குறிப்புகளையும் அவரிடம் தருகிறார். அந்த நினைவுக் குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். அந்த இளைஞன் பெயரற்றவன், ஊரற்றவன், பொற்றோரைப் பற்றி அறியாதவன், ஆயினும் அவற்றைப் பற்றி கவலைப்படாதவன். "ஒற்றைப் பெயர் கொண்டு என்னை அழைப்பது எனக்கு சம்மதமில்லை, ஒவ்வொரு கணமும் நானொரு புதிய மனிதன்' என்றும் "ஒருவேளை எனக்கொரு நாடு இருந்தாலும்கூட அதை நான் துறந்து விடுவேன், பிரபஞ்சமே எனது வீடு' என்றும் கூறுகிறான். பெரிய தத்துவங்களைக்கூட எளிய மொழியில் எழுதியிருக்கிறான். "தனக்குத் தெரியாததை மறுப்பது மனித இயல்பு', "வாழ்க்கை மாளிகையைக் கட்ட பணம் அடித்தளமாக அமையாது',"போரை வாழ்க்கைப் போராட்டம் என்பதைவிட மரணப் போராட்டம் என்பதே சரி',"ஒரு முட்டாளின் கடவுள் அவனது முட்டாள்தனம்தான்'," தற்காலிகம் நிரந்தரமானது, நிரந்தரம் ஒரு மாயை'- போன்றவை நினைவுக் குறிப்புகளின் பல இடங்களில் காணப்படும் ஒருவரி தத்துவங்கள். கடல் பற்றிய சிந்தனையும் உழைப்பாளர் தினத்தன்று எழுதப்பட்ட குறிப்புகளும் தன் ஆத்மாவோடு நடத்தப்பட்ட உரையாடலும் மிகவும் சிறப்பானவை. அந்நியத் தன்மையற்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு பலம் சேர்க்கிறது.
Book Details
Book Title அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் (Ambai)
Author மிகெய்ல் நைமி
Translator கவிஞர் புவியரசு (KAvingar Puviyarasu)
ISBN 9788184464764
Publisher விஜயா பதிப்பகம் (vijaya pathipagam)
Pages 145
Year 2019
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மிர்தாதின் புத்தகம்உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது “மிர்தாதின் புத்தகம்!”இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது...மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது!நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, மிகச் சி..
₹261 ₹275
கரமசோவ் சகோதரர்கள் பகுதி-1&2உலக இயக்கத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி.ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள..
₹1,663 ₹1,750