மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல புதிரானதும்கூட... இமயமலை அடிவாரம் எங்கும் பல சித்தர்களும் யோகிகளும் ஆதிமுதல் இன்றுவரை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இமயமே அவர்களின் இறை உலகம். இந்துக்கள் மட்டுமல்லர், வேற்று மதங்களைச் சார்ந்தோரும் அமைதியை நாடி இமயமலைக்குச் செல்கின்றனர். அந்த இடத்தின் ஈர்ப்பு..
தொண்டு, சேவை, பொது நலம் ஆகியவற்றுக்கான விளக்கத்தை அறநூல்களாகக் கொடுத்து, அதன்படி வாழ்ந்தும் காட்டியவர்கள் நம் நாட்டில் வாழ்ந்த மகான்கள். அவர்களுள் ஒருவராக, ஆதரவற்றோருக்கு ஆபத்பாந்தவனாக இருந்து அவர்களை அரவணைத்து அருள்புரியும் கருணைக் கடல் சிவானந்தர். தமிழகத்தில், தாமிரபரணிக் கரை கிராமத்தில் பிறந்தவர்..
‘அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை’ என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது? இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்த..
இயற்கை உணவுப் பொருள்கள், ஆரோக்கியத்தோடு அழகையும் தரக்கூடியவை. அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமல்ல, இன்றைய காலத்தில் ஆண்களுமே ஆசை கொள்கின்றனர். அதற்காக செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்களை வாங்கி உபயோகிக்கின்றனர். அதனால் அழகுக்குப் பதில் உடல் ஆரோக்கியம்தான் கெடுகிறத..
இனியெல்லாம் இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... என்று இந்தப் பூமிப் பந்திலிருக்..
இயற்கை இன்றி உயிர்கள் இல்லை... இயற்கையோடு ஒன்றி வாழும் சூழல்தான் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இயற்கையை நாம் பாதுகாத்தால் அது நம்மைப் பாதுகாக்கும். உழைப்பில்லாமல் முன்னேறத் துடிக்கும் மனிதனின் பேராசையினால் விவசாய நிலம் சுருங்கி உணவு உற்பத்தியும் குறைந்துவிட்டது. காற்று மாசுபடுவது மட்டுமின்றி செயற்கை உர..
வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய வாழ்க்கையை அறிய இலக்கியங்கள் உதவும். ஆனால், இவை எந்தக் காலத்தில் நடந்தன என்பதற்குத் தக்க சான்றுகள் வேண்டும். சங்க இலக்கியங்கள் சோ..
இலக்கியம் என்பது என்ன?' என்ற கேள்விக்கு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இலக்கியவாதிகள், பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனர். அதில் ஒன்றுதான், 'வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி' என்பதும். ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு, வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு, அது எழுதப்பட்ட காலத்துக்கே வாசகர்களை கொண்டுசெல்ல வேண்டும்..
`சுங்கம் தவிர்த்த சோழன்' என வரலாறு சொல்லும் முதலாம் குலோத்துங்கச் சோழன், சாளுக்கிய ராஜேந்திரனாக இருந்து அநபாயச் சோழனாக ஆனவன். சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சோழ மரபைத் தூக்கி நிறுத்தியவன் இவன்தான். இந்தக் குலோத்துங்கச் சோழனின் இளமைக் கால சம்பவங்களைக் கொண்டு புனையப்பட்ட வரலாற்று நாவல் இது. மாமன்னர்..
சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு. அப்படிப்பட்ட சித்தர்களில் போகர் தனித்துவமிக்கவராகக் கருதப்படுகிறார். ஏனெனில் பழநி முருகன் சிலையை நவபாஷாணங்களால் உருவாக்கியவர் அவர் என்பத..
இந்தக் கலியுகத்தில், இறைவன் நம்முன் காட்சி அளித்து, பக்தா... என்ன வரம் வேண்டும்? என்று கேட்டால், அடுத்த கணமே, நோய்நொடி எதுவும் இல்லாமல் என்றென்றும் நான் இளமையாக இருக்கும் வரத்தைக் கொடு!என்றுதான் கேட்கத் தோன்றும். வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகில், இளமையும் அறிவும்தான் ஒரு மனிதனை எப்போதும் சந்தோஷமாக..